பதவியேற்றுக் கொண்டார் பன்வாரிலால்..... தமிழகத்தின் புதிய ஆளுநராக  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் !!!

 
Published : Oct 06, 2017, 10:07 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
பதவியேற்றுக் கொண்டார் பன்வாரிலால்..... தமிழகத்தின் புதிய ஆளுநராக  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் !!!

சுருக்கம்

Banwarilal sworn in as TN governer

பதவியேற்றுக் கொண்டார் பன்வாரிலால்..... தமிழகத்தின் புதிய ஆளுநராக  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் !!!

தமிழகத்தின் 20வது கவர்னரான பன்வாரிலால் புரோஹித் இன்று  பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் காலை 9.30 மணிக்கு    நடைபெற்ற விழாவில், ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யா சாகர் ராவுக்கு பதிலாக அஸ்ஸாமில் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் புதிய  ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் நேற்று சென்னை வந்தார். இன்று காலை  9.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  இந்திரா பானர்ஜி , பன்வாரிலால் புரோகித்துக்கு ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி    பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், எ.வ.வேலு, பொன்முடி, அன்பழகன், ஆர்.எஸ்.பாரதி, மா.சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். பா.ஜ., எம்.பி.,க்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க நாட்டு தூதரக அதிகாரிகளும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். கவர்னர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு முன்வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது.

டிஜிபி ராஜேந்திரன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..