மணிப்பூர் விவகாரத்தில், "பாஜகவின் வண்டவாளம் தண்டவாளம் ஏறுதாகவும், பாராளுமன்றத் தேர்தலில் நம் INDIA கூட்டணிக்குத்தான் வெற்றி என்றும் விளாத்திகுளத்தில் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் முகவர்கள் (BLA-2) கூட்டம் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், அனைத்து ஒன்றிய நகரச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் பாக முகவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், பாஜகவிற்கு எதிரானவர்கள் அனைவரையும் மிரட்டக்கூடிய, ஒடுக்கக்கூடிய ஒரு அரசாக தான் பாஜக செயல்பட்டு வருகிறது. இன்றைக்கு பாஜகவின் வண்டவாளம் தண்டவாளம் ஏறுது. மணிப்பூரில் நடைபெற்று வந்த பிரச்சனை யாருக்கும் தெரியவில்லை. அம்மாநில முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. பிரதமர் நடவடிக்கை எடுக்கவில்லை. அங்கிருந்த காவலர்கள், இராணுவம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு வைத்தார்.
குற்றவாளிகளை மதம் சார்ந்து பார்க்கக் கூடாது; இஸ்லாமிய அமைப்புகளுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை
மணிப்பூரில் 80 நாட்களாக கலவரத்தை தூண்டிவிட்டு அங்குள்ள முதலமைச்சர் அமைதியாக இருக்கிறார். அவர் முதலமைச்சராக இருப்பதற்கு லாயக்கில்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நம் இந்தியா கூட்டணி தான் உறுதியாக வெற்றி பெறப்போகிறது.
சென்னையில் அரசுப்பேருந்தின் மேல் ஏறி கல்லூரி மாணவர்கள் ரகளை; பொதுமக்கள் அவதி
பாக முகவர்களாகிய நீங்கள் தான்... வேர்களாகவும், விழுதுகளாகவும் நின்று திராவிட முன்னேற்றக் கழகத்தை தாங்கக்கூடிய செயல் வீரர்கள். நமக்கு நாமே கைதட்டிக் கொள்ளலாம் என்று பாராட்டினார். நீங்கள் (பாக முகவர்கள்) மனதை வைத்தால்தான் நாம் வெற்றிக்கனியை பறிக்க முடியும். கிளிசரின் போட்டு நடித்த குஷ்புவிடம் மணிப்பூர் சம்பவம் குறித்து பேசவில்லையே என்று கேட்டதற்கு "கலைஞரின் தொண்டர்கள் எல்லாம் முட்டாள்கள்" என்று தொடர்பில்லாமல் பேசி உள்ளதாக குற்றம் சாட்டினார்.