பிரதமர் மோடிக்கு எதிராக சர்வதேச சதி..! மணிப்பூர் கலவரத்தில் அந்நிய கைக்கூலிகள் - எச்.ராஜா ஆவேசம்

By Ajmal Khan  |  First Published Jul 24, 2023, 6:43 AM IST

கனிமொழி திகார் சிறையில் இருந்த போது துடிக்காத மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கு துடிப்பது ஏன்?. ஏனென்றால் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதலமைச்சர் வீட்டில் உள்ள அனைவரும் சிறை செல்வார்கள் என எச்.ராஜா தெரிவித்துள்ளார். 
 


மணிப்பூர் முதல்வரை ராஜினாமா செய்ய சொல்வதா.?

மேகதாது அணை விவகாரம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, ஆறுகளில் தடுப்பணை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பங்கேற்றார்.  இந்நிகழ்ச்சியில் மேடையில் கண்டன உரையாற்றிய பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா,

Latest Videos

undefined

இந்தியாவிலேயே நடைபெறும் பாலியல் பலாத்காரங்களில் 22% ராஜஸ்தானில் நடைபெறுவதாக காங்கிரஸ் அமைச்சர் கூறுகிறார். ஆனால், அசோக் கெலாட்டை யாரும் ராஜினாமா செய்ய கூறவில்லை. ஒரு வார்டு கூட வெற்றி பெறாத( நாம் தமிழர் கட்சி) மணிப்பூர் முதலமைச்சரை ராஜினாமா செய்ய கூறுகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எரித்து கொலை செய்யப்பட்டதற்கு எவ்விதமான விசாரணையும் ராஜஸ்தானில் கிடையாது.

செந்தில் பாலாஜிக்காக துடிப்பது ஏன்?

மேற்குவங்கத்தில் பாஜக பெண் வேட்பாளர் நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அதுகுறித்தி தமிழகத்தில் யாரும் பேசவில்லை. ஆனால் மம்தா பானர்ஜியை அழைத்து விருந்து அளிக்கிறீர்கள். இந்து பெண் கற்பழிக்கப்பட்டால் தமிழகத்தில் இந்து விரோத கும்பல்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டால் உடனே கவலைப்படுவார்கள். மம்தா அருகில் அமர்ந்து முதலமைச்சருக்கு மணிப்பூர் பற்றி பேச என்ன தகுதி உள்ளது. கனிமொழி திகார் சிறையில் இருந்த போது துடிக்காத மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கு துடிப்பது ஏன்?. ஏனென்றால் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதலமைச்சர் வீட்டில் உள்ள அனைவரும் சிறை செல்வார்கள். அதிலும் மதச்சார்பற்ற வேஷம் போடாமல் இந்து கோயில்களுக்கு சென்று வரும் துர்கா ஸ்டாலின் சிறை செல்ல மாட்டார்.

இந்தியாவில் கலவரத்தை உருவாக்க சீனா திட்டம்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மணிப்பூர் கலவரங்களை வெளிநாட்டு நபர்கள் தூண்டிவிடும் கருத்தை பல பேர் கூறியுள்ளனர். மணிப்பூர் மலைப்பகுதியில் இருந்து மியான்மருக்கு எளிதாய் செல்லலாம் , ஆகையினால் இதை பயன்படுத்தி சீனா இந்தியாவில் கலவரங்கள் மூட்டி வருகிறது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்துக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தாரா.  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேங்கைவயல் கிராமம் தொடர்பாக எந்த போராட்டமும் நடத்தவில்லை. ஆனால் தற்போது மணிப்பூருக்கு மட்டும் போராட்டம் நடத்துகின்றார் அவர் தலித் மக்களின் பாதுகாவலர் கிடையாது என எனக்கு நன்றாக தெரியும். 

மணிப்பூர் பிரச்சனை சர்வதேச சதி

மேற்கு வங்காளத்தில் பாஜக பெண் வேட்பாளரை நிர்வாணப்படுத்தி திரிணாமூல் குண்டர்கள் அவரை வன்கொடுமை செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து கண்டிக்காதவர்கள் மணிப்பூர் பற்றி கண்டிக்கக் கூடாது. இன்றைக்கும் கூட நான் கட்சியில் ஒரு தேசிய பொறுப்பை கொண்டுள்ளேன் ஆகையினால் எம்எல்ஏ சீட்டு எனக்கு தற்போது தேவையில்லை. நான் இதுவரை எந்த பதவியையும் தொகுதியிலும் நிற்பதற்கு கேட்கவில்லை.  ஆனால் கட்சி எனக்கு எந்த குறையும் வைத்ததில்லை.  20 நாட்களாக மணிப்பூரில் மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர் வெளிநாட்டு சதிகளை பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர்,இதைப் போன்று நாட்டில் குழப்பத்தை கொண்டு வருவது தேச துரோகம் என எச் ராஜா தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

அண்டை மாநிலங்களுக்கும் பரவும் மணிப்பூர் பதற்றம்! மிசோரத்தில் இருந்து வெளியேறும் மெய்தி மக்கள்!

click me!