தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று நள்ளிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு நேற்று இரவு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் அவரை அனுமதித்துள்ளனர். இதனையடுத்து துரைமுருகனின் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துரைமுருகனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படும் துரைமுருகன் மருத்துவமனைக்கு சென்று தனது உடல்நிலையை பரிசோதித்து வருகிறார். இந்தநிலையில் தான் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். துரைமுருகனின் உடல் நிலை தொடர்பாக மருத்துவ அறிக்கை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.