சாலை விபத்தில் உயிரிழந்த சபரிமலை பக்தர்கள்..! நிவாரணம் நிதி அறிவித்த முதலமைச்சர்

By Ajmal Khan  |  First Published Dec 25, 2022, 7:40 AM IST

தேனி மாவட்டம், குமுளி மலைச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்த 2 நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.


குமுளி மலைப்பாதையில் விபத்து

சபரிமலைக்கு சென்று திரும்பும் வழியில் குமுளி மலைப்பாதையில் இருந்து கார் கிழே விழுந்த விபத்தில் 8 பேர் உயரிழந்துள்ளனர். இதனையடுத்து உயரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் உட்பட பத்து நபர்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று திரும்புகையில் அவர்கள் வந்த வாகனம் நேற்று இரவு உத்தமபாளையம் வட்டம் குமுளி மலைப்பாதையில் எதிர்பாராதவிதமாக விழுந்து விபத்துக்குள்ளானது, இச்செய்தியை அறிந்தவுடன், தேனி மாவட்ட பொறுப்பு அமைச்சரான மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. இ பெரியசாமி அவர்களை உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, விபத்துக்குள்ளானவர்களுக்கு உரிய உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினேன்.

Tap to resize

Latest Videos

டிக் டிக் டிக்… பயந்துட்டியா மல… இணையத்தில் வைரலாகும் திமுகவினரின் போஸ்டர்!!

8 பேர் உயிரிழந்த பரிதாபம்

இந்த விபத்தில் திரு.நாகராஜ் (வயது 50), திரு முனியாண்டி என்ற சாக்கு கடை முனியாண்டி திரு.சிவக்குமார் (வயது 41), திரு.வினோத்குமார் (வயது 43), திரு.கண்ணுச்சாமி (வயது 65). திரு.தேவதாஸ் வயது 55), திரு.கலைச்செல்வன் (வயது 35). மற்றும் திரு கோபாலகிருஷ்ணன் (வயது 48) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் இவ்விபத்தில் காயமுற்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 2 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட உத்தரவிட்டுள்ளேன்.

நிவாரண நிதி அறிவித்த முதலமைச்சர்

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்த 2 நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

சபரிமலைக்கு சென்று திரும்பிய போது பயங்கர விபத்து! 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. 8 பக்தர்கள் பலியான சோகம்.!

click me!