Durai Murugan : காவிரி விவகாரத்தில் 10 முதல்வர்களை பார்த்துவிட்டேன்; கர்நாடகாவுக்கு துரைமுருகன் கண்டனம்

By Velmurugan s  |  First Published Sep 16, 2023, 11:45 AM IST

காவிரி விவகாரத்தில் நான் 10 முதல்வர்களை பார்த்துவிட்டேன் வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு என்ற தொணியில் பேசும் சித்தராமையாவின் பேச்சு வேதனை அளிப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.


வேலூர் மாவட்டம்  கே வி குப்பத்தில்  கலைஞர்  மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்க விழா  மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில்  தமிழக நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன்  கலந்துகொண்டு மகளிருக்கு மாதம் ஆயிரம்  உரிமைத் தொகையை  பெறும் வகையில்  ஏடிஎம் அட்டைகளை வழங்கினார். இவ்விழாவில்  வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்,  அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார்,  வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா துணை மேயர் சுனில்  உள்ளிட்ட விழாவில் பங்கேற்றனர்.

விழாவில்  தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனாவின் போது  ஆயிரம் ரூபாய் மட்டுமே உதவித்தொகையாக வழங்கப்பட்டது. 5 ஆயிரமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவர்கள் வழங்கவில்லை. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன்  4000 வழங்கினோம். மேலும் உங்கள் பெண் பிள்ளைகளின் கல்விக்காக  மாதம் ஆயிரம் உதவி தொகை வழங்கி வருகிறோம். 

Latest Videos

undefined

கோவை ரயில் நிலையத்தில் நொடிப்பொழுதில் பெண்ணை காப்பாற்றிய காவல் அதிகாரி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், காவிரியில்  நாம் தண்ணீர் கேட்பது  யாசகம் அல்ல. அது நம்முடைய உரிமை. உச்சநீதிமன்றத்தால்  அறிவுறுத்தி சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவர்களை கேட்டால் இப்போது தண்ணீர் இல்லை என்கிறார்கள். அதற்காக  மழை பெய்து அதிக தண்ணீர் வந்தால் தான் தண்ணீர் கொடுக்க முடியும், குறைந்த தண்ணீர் இருந்தால் கொடுக்க முடியாது என்று  கர்நாடகா சொல்ல முடியாது. கையளவு தண்ணீர் இருந்தாலும்  அதை எங்களுக்கு பங்கிட்டு தர வேண்டும்  என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. 

ஆனால் ஆங்காங்கே அணைகளிலே தண்ணீரை வைத்துக்கொண்டு  கே ஆர் சாகரிலும், அதே போன்று மற்ற அணை கட்டுகளிலும் நீரை தேக்கி வைத்துள்ளனர். ஆனால் எங்களுக்கு உரிய தண்ணீரை தர வேண்டும் என்று நாங்கள் கர்நாடகாவிடம் கேட்கவில்லை. ஆனால் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட  காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நாங்கள் தண்ணீரை கேட்டோம்  அவர்கள் இரண்டு மாநிலத்திற்கும் பொதுவானவர்கள். அவர்கள் கர்நாடகத்தில் இருக்கிற அணைகளின் இருப்பை கணக்கிட்டு  15 நாட்களுக்கு  விநாடிக்கு  5 ஆயிரம் கன அடி  தண்ணீரை தரலாம் என  முடிவு செய்து அறிவித்துள்ளனர். 

கர்நாடகத்தின் இப்போக்கு சரியானது அல்ல. அதற்காக அவர்கள் சர்வ கட்சி கூட்டத்தை கூட்டுகிறார்கள்.  அதனால் எங்களுக்கு ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. நாம் சர்வ கட்சி கூட்டத்தை கூட்ட முடியாதா,  கூட்டலாம் நாமும்  அது ஒன்றும் பெரிய தவறில்லை.  ஆனால்  21ம் தேதி  உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.  அந்த வழக்கு வரும்போது  என்னென்ன நடந்தது என்பதை  எங்களுடைய மூத்த வழக்கறிஞர்கள் சொல்ல உள்ளார்கள். அதன்பின் நமக்கு சாதகமாக இல்லை என்றால்  அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்.  

கோவில்பட்டியில் சிதிலமடைந்த சாலைகளை சீர் செய்யக்கோரி தாமாகா கட்சியினர் போராட்டம்

நாம் இப்போது எதிர்பார்ப்பது  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை. இல்லையென்றால் நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்.  எப்போது பார்த்தாலும் கர்நாடகத்தில்  தமிழகத்திற்கு எதிராக நடக்கும் திருவிளையாடல்கள்  கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா  மூத்தவர். அரசியலில் முதிர்ந்தவர். கலைஞருக்கு வேண்டியவர், எனக்கும் வேண்டியவர்.  அவர் கூட  நிலைமையை புரிந்து கொள்ளாமல்  பேசி இருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.  நீர்வளத்துறை அமைச்சராக இருக்க கூடிய சிவகுமார் அவர்கள்  மேகதாது அணை கட்ட வேண்டும் என அவர் தொகுதியில் சொல்கிறார்.  அவர் உணர்ச்சிவசப்படலாம்  அவர் அப்பேற்பட்டவர் தான்.  

ஆனால் சித்தராமய்யாவிடத்தில் எனக்கு அளவு கடந்த மரியாதை உள்ளது.  என் வாழ்நாளில் இரண்டு   பட்டேல்களை பார்த்துள்ளேன்.  குண்டூராவை பார்த்துள்ளேன்     ராமகிருஷ்ண ஹட்டோ பார்த்திருக்கிறேன் அதற்குப் பிறகு எஸ்.எம். கிருஷ்ணாவை பார்த்து இருக்கிறேன்.  காவிரி வரலாற்றில்  ஆரம்பத்தில் இருந்து காவிரி பிரச்சினை  முதல் இந்த இலாகாவை கையில் வைத்திருப்பவன் நான். இதன் ஒவ்வொரு அணுவும்  எனக்கு தெரியும்.  ஆகையால் இன்னும் நான் சித்தராமையா இடத்தில் மரியாதையாக அய்யா  நீங்கள் தண்ணீர் தருவது ஒரு பக்கம் இருக்கட்டும்  நீங்கள் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசுவது  என் மனதிற்கு வருத்தத்தை தந்துள்ளது என கூறினார்.

click me!