திமுக ஆட்சியில் போதை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகமாவதால் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நிகழ்கிறது. காவல்துறையும், லஞ்ச ஒழிப்புதுறையும் திமுக அரசின் ஏவல்துறையாக செயல்பட்டு வருகிறது.
மாநகர பேருந்துகளுக்கு லிப்ஸ்டிக் அடித்து மகளிருக்கான இலவச பேருந்து என்று திமுக ஏமாற்றி வருகிறது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ;- தமிழகத்தில் இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட திட்டங்கள் முடக்கப்பட்டது. ரூ.30,000 கோடியை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஊழலில் சாதனை செய்து வருகிறது திமுக அரசு. தமிழகத்தை காப்பாற்ற திராவிட மாடல் அரசு அகற்றப்பட வேண்டும்.
இதையும் படிங்க;- பால் விலை ஏறிட்டே போகுது.. 28 மாதத்தில் 8 முறையா.? அப்போதைய ரேட் இவ்வளவு தான் - இபிஎஸ் கண்டனம்
திமுக ஆட்சியில் போதை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகமாவதால் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நிகழ்கிறது. காவல்துறையும், லஞ்ச ஒழிப்புதுறையும் திமுக அரசின் ஏவல்துறையாக செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொள்ளையடிப்பது ஒன்றுதான் திமுக அரசின் குறிக்கோள் என விமர்சனம் செய்தார். தமிழகத்தில் சரியான நிர்வாகம் இல்லாததால் சுகாதாரத்துறை சீர்கெட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. தேவையான மருந்துகளும் இல்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மருத்துவத்துறை சீர்கெட்டுள்ளது.
கட்டிட சங்க தலைவராக இருந்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட ஆர்.எஸ்.பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி மீது திமுக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதில் எந்த பயனும் இல்லை என உயர்நீதிமன்றமே தெரிவித்த பிறகும் நடவடிக்கை இல்லை.
இதையும் படிங்க;- எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இணைந்த முன்னாள் மநீம நிர்வாகி! வந்ததும் வராதுமாக முதல்வரை பதவி விலக சொல்லி ஆவேசம்!
ஒரே நாடு ஒரே தேர்தல் கண்டிப்பாக வரும். அதிமுக தொண்டர்கள் தயாராக வேண்டும். ஒரே நாடு ஒரு தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டால் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் ஆண்டவனாலும் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது. மாநகர பேருந்துகளுக்கு லிப்ஸ்டிக் அடித்து மகளிருக்கான இலவச பேருந்து என்று ஏமாற்றி வருகிறது. தேர்தல் போர் தொடங்கவிட்டது நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற உழைக்க வேண்டும் என
எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.