எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்தெடுதத்த அதிமுக இயக்கத்தோடு பாஜக கூட்டணி... தூள் கிளப்பிய அமித்ஷா..!

By vinoth kumarFirst Published Feb 28, 2021, 8:07 PM IST
Highlights

தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் நான், தமிழ் மக்களோடு அவர்களது தமிழ் மொழியில் பேச முடியாததை எண்ணி வருந்துகிறேன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். 

தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் நான், தமிழ் மக்களோடு அவர்களது தமிழ் மொழியில் பேச முடியாததை எண்ணி வருந்துகிறேன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். 

விழுப்புரத்தில் ஜானகிபுரத்தில் பாஜக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில்;-  நாட்டின் தொன்மையான மொழி தமிழில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது. திருவள்ளுவரை பற்றிய அறியவும், தமிழில் பேசவும் விருப்பம் என பிரதமரும் தெரிவித்துள்ளார்.  தமிழ் மண்ணில் பிறந்த பல மகான்கள், உலகளவில் பெருமையை சேர்த்தவர்கள் என புகழாரம் சூட்டியுள்ளார். 

திமுக காங்கிரஸ் கூட்டணி என்பது குடும்ப ஆட்சியில் நம்பிக்கையுள்ள கூட்டணி. ஆனால், அதிமுக பாஜக கூட்டணி என்பது மக்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கும் கூட்டணியாகும். ஏழை, எளிய மக்களுக்கக்கான அரசாக மத்திய பாஜக ஆட்சி உள்ளது. ராணுவ பாதுகாப்பு, பொருளாதாரத்தை சிறப்பாக வழிநடத்துவது அதிமுக, பாஜக அரசுகள். எம்.ஜி.ஆரின் நலத்திட்டங்களை மத்திய அரசு நாடு முழுவதும் செயல்படுத்துகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்தெடுதத்த அதிமுக இயக்கத்தோடு பாஜக கூட்டணி வைத்திருக்கிறது. திமுகவுக்கும், காங்கிரசுக்கும் மக்களைப்பற்றி எந்த கவலையும் இல்லை என விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் முகாமுக்குள் புகுந்து தீவிரவாதிகளை தாக்கி அழித்தது மோடி அரசு. மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் அரசாக மோடி அரசு உள்ளது. 70 ஆண்டுகள் காங்கிரஸ் செய்யாததை 7 ஆண்டுகளில் பாஜக அரசு செய்துள்ளது. சோனியா காந்தி ராகுலை பிரதமாருக்குவது குறித்து கவலைப்படுகிறார். ஸ்டாலின் உதயநிதியை முதல்வராக்குவது குறித்து கவலைப்படுகிறார். அவர்கள் ஊழல், பிரித்தாளும் அரசியலை பின்பற்றுகிறார்கள்.  தமிழகத்துக்கான திட்டங்களில் மத்திய அரசு எப்போதும் இருந்து பின்வாங்கியது இல்லை. நிதியமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சிறந்த நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் விளங்குகிறார். மத்திய அரசுடன் மோதல் போக்குடன் செயல்படும் ஆட்சி வேண்டுமா? என அமித்ஷா காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!