எம்.ஜி.ஆர். தொகுதியில் களமிறங்கும் கமல்... அதிர்ச்சியில் அதிமுக... மகிழ்ச்சியில் ம.நீ.ம...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 28, 2021, 07:36 PM IST
எம்.ஜி.ஆர். தொகுதியில் களமிறங்கும் கமல்... அதிர்ச்சியில் அதிமுக... மகிழ்ச்சியில் ம.நீ.ம...!

சுருக்கம்

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள கமல் ஹாசன், மயிலாப்பூர் அல்லது ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடுவார் எனக்கூறப்படுகிறது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட 'மக்கள் நீதி மய்யம் கட்சி' முதன் முதலாக 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. குறைந்த காலத்திலேயே தேர்தலை சந்தித்திருந்த நிலையில் தற்போது சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்க இருக்கிறது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கான தீவிரமான முயற்சிகளை மக்கள் நீதி மய்யம் மேற்கொண்டிருக்கிறது. 

சீரமைப்போம் தமிழகத்தை என தன்னுடைய முதற்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்த கமல் ஹாசன், கால் அறுவை சிகிச்சை காரணமாக சில நாட்கள் ஓய்வில் இருந்தார். தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தீயாய் களத்தில் இறங்கி, வேட்பாளர் தேர்வு, கூட்டணி பேச்சுவார்த்தை என பரபரப்பாக இயங்கி வருகிறார். 


இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள கமல் ஹாசன், மயிலாப்பூர் அல்லது ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடுவார் எனக்கூறப்படுகிறது. அதிலும் கமலின் முதல் சாய்ஸ் ஆலந்தூர் தானாம். காரணம் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். போட்டியிட்ட தொகுதிகளில் ஒன்றான பரங்கிமலை தொகுதி தான் தற்போது ஆலந்தூர் என அழைக்கப்படுகிறது. அதனை மனதில் வைத்துக் கொண்டு தான் நான் எம்.ஜி.ஆர் மடியில் தவழ்ந்து வளர்ந்தவர் என பிரச்சாரத்தில் கமல் ஹாசன் பேசியதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே எம்.ஜி.ஆரை கமல் ஹாசன் சொந்தம் கொண்டாடுவதால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!