எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ரத்தம் ஓடும் அதிமுகவினர் சசிகலா பக்கம் போக மாட்டார்கள்... அடித்துச் சொல்லும் ஜெயகுமார்..!

Published : Oct 11, 2021, 05:49 PM IST
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ரத்தம் ஓடும் அதிமுகவினர் சசிகலா பக்கம் போக மாட்டார்கள்... அடித்துச் சொல்லும் ஜெயகுமார்..!

சுருக்கம்

இப்போது அங்கே போகிறேன், இங்கே போகிறேன் என்று சொல்கிறார். நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போங்கள், உங்க பக்கம் யாரும் வர மாட்டாங்க

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ரத்தம் ஓடும் அதிமுக தொண்டர்கள், சசிகலா பக்கம் செல்ல மாட்டாார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

 

திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ‘அதிமுக பொன்விழாவை முன்னிட்டு ஜெயலலிதா சமாதிக்கு சென்றுவிட்டு, தொண்டர்களை சந்திக்க போவதாக சசிகலா சொல்லியுள்ளார்.

சசிகலா 2, 3 கருத்துக்களை சொல்லி இருக்கிறார். ஒன்று, எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் எங்கேயும் போக மாட்டார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ரத்தம் ஓடும் ஒரு தொண்டன் சாகும் வரை அதிமுகவில்தான் இருப்பான். அவன் எங்கேயும் போக மாட்டான். சசிகலாவான உங்ககிட்ட வர மாட்டான்.

2வது, சிறையில் இருந்து வந்தபோது ஜெயலலிதா சமாதிக்கு ஏன் நீங்கள் போகவில்லை? இப்போது அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக எல்லா வகையிலும் பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்ட இவர், இப்போது அங்கே போகிறேன், இங்கே போகிறேன் என்று சொல்கிறார். 
நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போங்கள், உங்க பக்கம் யாரும் வர மாட்டாங்க’’ எனத் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!