இடித்துறைக்கப் பேசினாரா..? கருணாநிதி குடும்பத்தை சீண்டும் வைகோ..?

By Thiraviaraj RMFirst Published Oct 11, 2021, 4:12 PM IST
Highlights

நான் அவரை ஊக்குவிக்கவில்லை. அதே நேரத்தில் வந்து விடக்கூடாது என்று தடுப்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சித்துப் பார்த்தேன். 

சிலர் அவர்களை கொண்டு வரவேண்டும் என்று அரசியலில் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளது திமுகவினரை குத்திக்காட்டுவதாக உள்ளதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தனது மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவது குறித்து இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறார் வைகோ. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நாகலாபுரத்தில் இது குறித்து பேசிய அவர், ’’துரை வையாபுரி இரண்டு ஆண்டு காலமாக எனக்கே தெரியாமல் கட்சிக்காரர் வீடுகளுக்கு சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சி என போய் வந்தார். கட்சியை சேர்ந்தவர்களுக்கு உடல்நலக் குறைவு என தகவல் கேட்டாலும் சென்று வந்தார். சிகிச்சைக்கு உதவி செய்து வந்துள்ளார். 

இது எனக்கு தெரியாது. அதன் பின்னர் எனக்கு தெரியாமலே திருமண வீடுகளில் அவரது படத்தை சுவரொட்டிகள் போடக்கூடாது என அவர்களிடம் சொன்னேன். மாநாட்டு பந்தலில் அவர் படம் போடக்கூடாது என கூறினேன். அப்படி போடப்பட்டிருந்ததை அகற்றச் சொல்லி இருக்கிறேன். இதே செயலில் நிர்வாகிகள் ஈடுபட்டால் கட்சியை விட்டு நீக்கவும் தயங்க மாட்டேன் எனக் கூறினேன். நான் அவரை ஊக்குவிக்கவில்லை. சில குடும்பங்களில் வாரிசுகளை அரசியலில் புகுத்துகின்றனர். சிலர் அவர்களை கொண்டு வரவேண்டும் என்று அரசியலில் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். 

நான் அவரை ஊக்குவிக்கவில்லை. அதே நேரத்தில் வந்து விடக்கூடாது என்று தடுப்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சித்துப் பார்த்தேன். அதை மீறி இப்பொழுது காரியங்கள் நடக்கின்றன. என்னை மீறி தொண்டர்கள் எங்களுக்கு வழிகாட்ட நல்ல ஒரு வழிகாட்டி வேண்டும். அதற்கு எல்லா தகுதியும் துரை வையாபுரியிடம் இருக்கு என அழைத்துக் கொண்டு போகின்றனர். இக்கட்சி தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. தொண்டர்கள் விருப்பம் எதுவோ அது ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும்’’ என அவர் தெரிவித்தார். 

வைகோ தனது மகனை அரசியலுக்கு வரவிடாமல் தடுப்பதற்கு முக்கிய காரணமாக தான் பட்ட கஷ்டங்களை, விமர்சனங்களை தனது மகனும் அடையக்கூடாது எனக் கருதுகிறாராம். ‘’என்னுடைய வாழ்க்கையில் 56 வருடங்களை பொதுவாழ்க்கைக்காக செலவழித்துள்ளேன். அதில் 28 வருடங்களில் லட்சக்கணக்கான மைல்கள் பயணம் செய்துள்ளேன். நடை பயணமாகவும் ஆயிரக்கணக்கான மைல்கள் சென்றுள்ளேன். ஏராளமான போராட்டங்களில் பங்கேற்று ஐந்தரை வருடங்களுக்கு மேல் சிறையில் இருந்துள்ளேன். 

என்னுடைய மகனுக்கும் அப்படிப்பட்ட கடினமான நிலை வர வேண்டாம் என்பதுதான் என்னுடைய கருத்து. என்னோடு அரசியல் போகட்டும் என நினைக்கிறேன். ஆனால், கட்சிக்காரர்கள் எல்லாம் என்ன முடிவில் இருக்கிறார்கள் என தெரியவில்லை' என முன்பு கூறியிருந்தார். ஆனால் தொண்டர்கள், மகனின் அழுத்தத்தால் தற்போது தனது நிலைப்பாட்டை மெல்ல வைகோ மாற்றி வருவதாக கூறப்படுகிறது.  

click me!