இமயமலைபோல் உள்ள அதிமுகவை பரங்கிமலைபோல் உள்ள சீமான் விமர்சிப்பதுதான் சிறந்த காமெடி.. எகிறி அடித்த ஜெயக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Oct 11, 2021, 4:05 PM IST
Highlights

புதிய அவைத்தலைவர் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக அவைத்தலைவர் தொடர்பான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் என கூறினார். 

பொது மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் சசிகலா என்றும் அதிமுக தொண்டர்கள் அவர் பக்கம்  போகமாட்டார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இமயமலை போல் உள்ள அதிமுகவை பரங்கிமலைபோல் உள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சிப்பது தான் இந்த ஆண்டின் ஆகச் சிறந்த காமெடி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொன் விழா கொண்டாடுவது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதையும் படியுங்கள்: அய்யய்யோ... தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. 15 தேதி வரைக்கும் நிலைமை ரொம்ப டேஞ்சர்.. பார்த்து அலர்டா இருங்க.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தோற்றுவிக்கப்பட்ட 50 ஆண்டுகளில் 30 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆண்ட வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு, பல சோதனைகளையும் இன்னல்களையும் தாங்கி எழுச்சி பெற்ற மாபெரும் இயக்கம் அதிமுக,  மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாஅதிமுகவின் 25ஆம் ஆண்டு மாநாட்டை நெல்லையில் சிறப்பாக கொண்டாடினார். 50வது ஆண்டு பொன்விழாவை எப்படி கொண்டாட வேண்டும் என்பது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றார். அதிமுக குறித்து சீமானின் கருத்துக்கு பதில் அளித்த அவர், அதிமுகவை யாராலும் அசைத்துக் கூடப் பார்க்க முடியாது இமயமலைபோலுள்ள அதிமுகவை, பரங்கிமலைபோல் உள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சிப்பது தான் இந்த ஆண்டின் சிறந்த காமெடி என குறிப்பிட்டார். 

இதையும் படியுங்கள்: எப்பா.. துரைமுருகன் மீது சீமானுக்கு இவ்வளவு பாசமா..?? திமுகவை பகிரங்கமாக எச்சரித்த நாம் தமிழர் கட்சி.

புதிய அவைத்தலைவர் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக அவைத்தலைவர் தொடர்பான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் என கூறினார். அதேபோல் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ புதிய வியூகம் வகுப்பது தொடர்பாக மட்டுமே கருத்துக்களை கூறினார் என்றும் அவரின் கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் ஜெயக்குமார் விளக்கினார். வரும் 16ஆம் தேதி மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் நினைவிடத்திற்கு சசிகலா வருகை தர உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பொது மக்களால் புறக்கணிக்கப் பட்டவர்தான் சசிகலா, அவர் பக்கம் அதிமுக தொண்டர்கள் செல்ல மாட்டார்கள் என அவர் திட்டவட்டமாக கூறினார்.
 

click me!