அதிமுகவில் களமிறங்கும் எம்.ஜி.ஆர். பேரன்... ஜெயலலிதா தொகுதியில் போட்டியிட விருப்ப மனு...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 4, 2021, 2:00 PM IST
Highlights

அதிமுக சார்பில் ஆலந்தூர், பல்லாவரம், ஆண்டிப்படி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட வி.ராமச்சந்திரன் விருப்ப மனு அளித்துள்ளார். 

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு தாக்கல், நேர்காணல், தொகுதி பங்கீடு ஆகிய பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிமுகவில் நேற்றுடன் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. இன்று ஒரே கட்டமாக விரும்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேர்காணல் நடத்தினர். 

அதிமுக சார்பில் போட்டியிட இரு தினங்களுக்கு முன்பு எம்ஜிஆரின் பேரன் ஜூனியர் எம்.ஜி.ஆர் ராமச்சந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்தார். எம்.ஜி.ஆரின் ராமாபுரம் இல்லத்தில் இருந்து 50க்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக வந்த விருப்ப மனு தாக்கல் செய்தார். அப்போது இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு நான் இருப்பேன் என்றும், அதிமுக தலைமை நிச்சயம் தனக்கு வாய்ப்பளிக்கும் என்றும் நம்புவதாகவும் தெரிவித்தார். 

அதிமுக சார்பில் ஆலந்தூர், பல்லாவரம், ஆண்டிப்படி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட வி.ராமச்சந்திரன் விருப்ப மனு அளித்துள்ளார். இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலில் எம்ஜிஆரின் பேரன் ஜூனியர் எம்.ஜி.ஆர் ராமச்சந்திரன் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆண்டிப்பட்டி தொகுதியில் கிட்டதட்ட 60 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொரோனா காலக்கட்டத்தில் வழங்கியுள்ளேன். அதனால் ஆண்டிப்பட்டி அல்லது எம்.ஜி.ஆர். போட்டியிட்ட ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டால் தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும்” என கருதுவதாக தெரிவித்துள்ளார். 

click me!