OPS மகனுக்காக நூற்றுக்கணக்கில் விருப்பமனு தாக்கல் செய்த ஆதரவாளர்கள். நேர்காணலில் கலந்து கொள்ளாததால் அதிருப்தி.

By Ezhilarasan BabuFirst Published Mar 4, 2021, 1:55 PM IST
Highlights

அவர் தானக்காக போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை என்பதாலும், அவர் நேர்காணலில் கலந்து கொள்ளவில்லை. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரின் ஆதரவாளர்கள் 100க்கும் அதிகமான விருப்ப மனுக்கல் தாக்கல் செய்திருந்த நிலையில், அவர் தான் போட்டியிட்ட விருப்ப மனு தாக்கல் செய்யாத நிலையில் தேனி மாவட்ட இன்று நடைபெற்று வரும் நேர்காணலில் பங்கேற்கவில்லை. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு 100 க்கும் மேற்பட்டோர் அவரின் பெயரில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். மேலும் தேனிமாவட்டம் கம்பம், சென்னை வில்லிவாக்கம், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.  அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒரே நாளில் இன்று நேர்காணல் நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணிக்கு  கன்னியாகுமரி, தூத்துகுடி, நெல்லை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட சேலம் மாவட்டங்கள் வரை நேர்காணல் நடைபெற்றது. 

இதில்  தங்களது பெயரில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் மட்டுமே நேர்காணலில் கலந்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஓபிஎஸ்சின் இளைய மகன் ஜெயபிரதீப் போட்டியிட விருப்ப மனுக்களை ஆதரவாளர்கள் தாக்கல் செய்து இருந்தாலும், அவர் தானக்காக போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை என்பதாலும், அவர் நேர்காணலில் கலந்து கொள்ளவில்லை. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்று தேனி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் அழைக்கப்பட்ட நிலையில் ஜெயபிரதீப்  நேர்காணலில்  பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. 

click me!