ஜெயலலிதாவின் கனவை டிடிவி தினகரனும் நிறைவேற்றுவார்..எடப்பாடியாரை அதிரவைத்த பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி.ரவி.

Published : Mar 04, 2021, 01:32 PM ISTUpdated : Mar 04, 2021, 01:58 PM IST
ஜெயலலிதாவின் கனவை டிடிவி தினகரனும் நிறைவேற்றுவார்..எடப்பாடியாரை அதிரவைத்த பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி.ரவி.

சுருக்கம்

சசிகலாவின் முடிவை பாஜக வரவேற்பதாகவும், ஜெயலலிதாவின் கனவான, ஒன்றிணைந்த பலமான அதிமுக, வளம், வளர்ச்சியான தமிழ்நாடு என்ற கனவை நிறைவேற்றும் வகையில் சசிகலா முடிவெடுத்திருக்கிறார்.  

ஜெயலலிதாவின் கனவை டிடிவி தினகரனும் நிறைவேற்றுவார் என நம்புவதாக தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி.ரவி தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி மற்றும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் பாஜக திநகர் அலுவலகத்தில் லோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த சி.டி.ரவி, 

சசிகலாவின் முடிவை பாஜக வரவேற்பதாகவும், ஜெயலலிதாவின் கனவான, ஒன்றிணைந்த பலமான அதிமுக, வளம், வளர்ச்சியான தமிழ்நாடு என்ற கனவை நிறைவேற்றும் வகையில் சசிகலா முடிவெடுத்திருக்கிறார். ஜெயலலிதா கனவை நினைவாக்கும் வகையில் பாஜகவும் - அதிமுகவும் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். தினாகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவின் வாக்குகளைப் பிரிக்காத என்ற கேள்விக்கு?  பதில் அளித்த அவர், இன்னும் நேரம் இருக்கிறது என்றும், 

டிடிவி.தினகரனும் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவார் என நம்புகிறோம் என்று பதிலளித்தார். மேலும், அதிமுகவை பிளவு படுத்த வேண்டும் என்றோ ஜெயலலிதாவின் கனவை சிதைக்க வேண்டும் என்றோ பாஜக நினைக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வரக்கூடாது அவர்களது குடும்பம் மட்டுமே வளர்ச்சி அடையக்கூடாது. அதற்கு அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும், 234 தொகுதிகளிலும் தங்களது கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது திட்டம் என தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

உங்களால பலபேர் இறந்திருக்கிறார்கள்... புதுவை மாநாட்டில் புஸ்ஸி ஆனந்திடம் சீறிய பெண் காவல் அதிகாரி
அந்த பக்கம் பொய்டாதீங்க.. விஜய் கூட்டணிக்கு செல்ல விடாமல் டிடிவி, ஓபிஸ்க்கு முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை..?