#BREAKING‘வாக்களிக்க இது கட்டாயம்’... சற்று முன்பு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 4, 2021, 1:32 PM IST
Highlights

இந்நிலையில் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு தாக்கல், நேர்காணல், தொகுதி பங்கீடு ஆகிய பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி 489 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,52,967 ஆக அதிகரித்துள்ளது.

எனவே கொரோனா தொற்றிலிருந்து வாக்காளர்களையும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் பாதுகாப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யப்பட அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணிநேரத்தில் தேர்தல் ஆணையம் மூலமாக வழங்கப்படும் பிபிஇ கிட்டை அணிந்து வந்து வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அதாவது பிற வாக்காளர்களுக்கு காலை 7 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில் வாக்காளர்களும், 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிபிஇ கிட் அணிந்து வாக்களிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

click me!