ஓபிஎஸ்க்கு ஆதரவு அளித்து வந்த பெரம்பலூர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இபிஎஸ்க்கு ஆதரவு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுக்குழு
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது அப்போது பொதுக்குழுவை நடத்தவும் பொதுக்குழுவில் கலந்து கொள்வோம் என உறுதி அளித்தும் எழுத்துப்பூர்வமாக கையெழுத்திட்டு 2300 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் மூலம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கடிதத்தை கொடுத்தனர். மேலும் அதிமுகவில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கவும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்களையும் வீசினர். இதனால் பொதுக்குழு கூட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லையென்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் 600 பேர் முன் வரிசையில் அமரவைக்கப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு புகார் தெரிவித்து இருந்தது.
ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் பதவியா? மத்திய அரசு கொடுத்த ஆஃபர்..!
ஒற்றைத் தலைமை விவகாரம்... அதிமுகவுக்கு இவர்தான் சரியாக இருப்பார்... விஜயபாஸ்கர் பரபரப்பு கருத்து!!
இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்த பொதுக்குழு உறுப்பினர்கள்
பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவு அதிகரித்துள்ளதாகவும், இபிஎஸ் அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் திரும்பியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 9 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இன்று எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வருகை தந்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் இபிஎஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாளர் செல்வக்குமார் தலைமையில் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டச்செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் ஓபிஎஸ் ஆதரவாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 2440 பொதுக்குழு உறுப்பினர்கள் இபிஎஸ்க்கு ஆதரவளித்துள்ளனர். புதிதாக 9 பொதுக்குழு உறுப்பினர்கள் இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ஓ.பி.எஸ் தரப்பில் ஆதரவு எண்ணிக்கை மேலும் சரிவடைந்துள்ளது.
இதையும் படியுங்கள்
AIADMK: அவர்கள் பாஜகவின் கைப்பாவை.. இபிஎஸ் Vs ஓபிஎஸ்? பகீர் கிளப்பிய முன்னாள் அதிமுக பிரமுகர்