
உடல் நலன் பாதிப்பை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் சாந்தன்,முருகன்,பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர்.
கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை பரோலில் விடுவிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால் சிறை நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்தது.
இதையடுத்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திமுக சார்பில் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.
இதனிடையே பேரறிவாளனின் தாயார் வாழும் சிறிது காலமும் எங்கள் மகனுடன் சேர்ந்து வாழ தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இன்னிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல் நலன் பாதிப்பை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.