
தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாஜக மாநில தலைவரை தேர்வு செய்வது வழக்கம். இதுபோல் தற்போதைய தமிழிசை சவுந்தர்ராஜன், பதவி காலம் முடியும் உள்ளது.
இதனால், பாஜக மேலிடம், தமிழகத்தின் புதிய தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்தது. அதன்படி மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அதில், தமிழிசையே தலைவர் பதவியை தொடரட்டும் என ஒரு மித்த கருத்து எழுந்ததாக தெரிகிறது. இதனால், தமிழிசை இரண்டாவது முறையாக வாய்ப்பை பெற்றுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன், பத்திரிகையாளரும், நடிகரும், அரசியல் விமர்சகருமான சோவின், ஆலோசனைகளை கேட்டு, பாஜக மூத்த தலைவர்கள் நடந்து வந்தனர். அவரது மறைவுக்கு பின்னர், சோவின் ஆடிட்டர் குருமூர்த்தி அந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
பாஜக சட்ட விதிகளின்படி மீண்டும் தமிழிசையே தலைவராக முடியாது. இதனால் அடுத்த தலைவராக எச்.ராஜாவை நியமிக்கலாமா என ஆடிட்டர் குருமூர்த்தியிடம், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனை கேட்டுள்ளார்.
அதை கேட்டதும், எச்.ராஜாவா வேண்டவே வேண்டாம் என ஸ்ட்ராங்காக முட்டுக்கட்டை போட்டாராம், ஆடிட்டர் குருமூர்த்தி.
பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் ஆடிட்டர் குருமூர்த்தியிடம் நட்பாக இருக்கும்போது எச்.ராஜாவுக்கு மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு என பாஜகவினர் குழம்பிவிட்டார்களாம்.
அனைவரும் வேண்டாம் என ஒதுக்கும் அளவுக்கு எச்.ராஜாவுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் அமித்ஷா விசாரித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது.