குருநாதா... கடனாளி ஆக்காமல் என்ன காப்பாத்திட்டியே!! வைகோவை காண்டாக்கிய போஸ்டர்

By sathish kFirst Published Sep 21, 2019, 11:24 AM IST
Highlights

ராமநாதபுரத்தை சேர்ந்த அரு.சுப்பிரமணியன் என்ற இளைஞர் வைகோவை கலாய்த்து ஊர் முழுக்க போட்டார் ஒட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

ராமநாதபுரத்தை சேர்ந்த அரு.சுப்பிரமணியன் என்ற இளைஞர் வைகோவை கலாய்த்து ஊர் முழுக்க போட்டார் ஒட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

ராமநாதபுரம் மாவட்ட மதிமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்த அரு.சுப்பிரமணியன் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பாக கட்சியில் இருந்து வைகோ நீக்கிவிட்டார். இதையடுத்து, தன்னை கட்சியிலிருந்து நீக்கிய பொதுச்செயலாளர் வைகோவுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் அந்த இளைஞர் ஒட்டியுள்ள போஸ்டர் மதிமுக சம்பவம் அந்த பகுதி மதிமுக நிர்வாகிகளை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது.

வைகோவின் போராட்ட குணத்தை பார்த்து கடந்த 2012-ம் ஆண்டு மதிமுகவில் சுப்பிரமணியன் இணைந்தார். நல்லா படித்த, துட்டு பார்ட்டி வேற, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரி தேர்தல் களத்தில் தீயா வேலை செய்வார் சுப்பிரமணி, ராமநாதபுரத்தில் டுவீலர் ஏஜென்ஸீஸ் வேறு நடத்திக்கொண்டிருப்பதால் சுப்பிரமணியனுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் நல்ல பேரு வேற.  இதனால் லோக்கல் கைகளால் ரெக்கமண்ட் பண்ணதை அடுத்து, சுப்பிரமணியனுக்கு இளைஞரணியில் பொறுப்பு கொடுத்தார். 

இந்நிலையில், கடந்த மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி வேட்பாளர் நவாஸ்கனிக்கு ஆதரவாக சுப்பிரமணியன் சரியாக வேலை பார்க்கவில்லை என்றும், அமமுக வேட்பாளருடன் சுற்றிக் கொண்டிருந்தார் எனவும் தலைமைக்கு ஓலை அனுப்பப்பட்டது. இதனால் காண்டான வைகோவின் உதவியாளர் அருணகிரி, சுப்பிரமணியனிடம் இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மதிமுகவில் இருந்து அரு.சுப்பிரமணியன் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. 

சபாஷ் குருநாதா இதைத் தான் நானும் எதிர்பார்த்தேன் என குஷியாகும் வகையில்,  சுப்பிரமணியன் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அதில், "கடனாளிஆக்காமல் கட்சியை விட்டு என்னை நீக்கியதற்கு வைகோவுக்கு நன்றி" எனக் கூறியுள்ளார். 

click me!