துரை வைகோ சின்ன பையன், அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - மதிமுக அவைத்தலைவர் அதிரடி

By Velmurugan s  |  First Published Apr 29, 2023, 7:24 PM IST

மதிமுகவின் உள் கட்சி விவகாரங்களை பொதுவெளியில் வெளியிடுவது முறையல்ல என்று அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கருத்து தெரிவித்திருந்தநிலையில், அதற்கு துரைவைகோ சின்ன பையன், அவருக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என்று அவைத்தலைவர் பதில் அளித்துள்ளார்.


மதிமுகவை திமுகவுடன் இணைப்பது தான் சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது என்று அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த கடிதத்தில் மகனை அரவணைப்பதும், சந்தர்ப்பவாத அரசியலும் எள்ளி நகையாட வைத்துவிட்டது என்றும் வைகோவை கடுமையாக சாடியிருந்தார்.

இது தொடர்பாக கட்சியின் தலைமை நிலைய செயலாளரான துரைவைகோ கூறுகையில், கட்சியின் பொதுக்குழுவில் விவாதிக்க வேண்டியதை பொதுவெளியில் வெளியிடுவது முறையல்ல. மதிமுக, திமுக இணைப்பு தொடர்பாக துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்க வேண்டும். மதிமுக அதை்தலைவர் பதவியில் இருந்து திருப்பூர் துரைசாமியை நீக்குவது குறித்து ஜூன் மாதத்தில் நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும். துரைசாமி எழுப்பிய கேள்விகளுக்கு வைகோ பதில் அளிப்பார் என்று தெரிவித்திருந்தார்.

Tap to resize

Latest Videos

Crime News: கோவை நீதிமன்றத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

துரை வைகோவின் கருத்து தொடர்பாக அவைத்தலைவர் துரைசாமி கூறுகையில், துரைவைகோ சின்ன பையன். அவருக்கெல்லலாம் பதில் கூறமுடியாது. நான் பொதுச்செயலாளர் வைகோவின் பதிலுக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன். வாரிசு அரசியலுக்கு எதிராகத்தான் மதிமுக தொடங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

திண்டுக்கலில் லாரி மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து; சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

click me!