
உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வராமல் தடுக்க மாயாவதியுடன் கைகோர்க்கத் தயாராக இருப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்..
ஐந்து மாநில சட்டப்பேரவையின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் உத்தரப்பிரதேசத்தின் 403 சட்டப்பேரவையிலி் அதிக தொகுதிகள் பாஜகவிற்கு கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஒருசில கணிப்புகள் மட்டுமே பாரதியஜனதா கட்சி அட்சி அமைக்கும் எனக் கூறிப்பட்டாலும், சில கணிப்புகள் அங்கு தொங்கு சட்டசபை அமையலாம் எனக் கணித்துள்ளன.
இந்நிலையில், தொங்கு சட்டசபை ஏற்பட்டு, பாஜக ஆட்சிக்கு வரலாம் என்ற சூழ்நிலை நிலவினால், அதை தடுக்க சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், தன் எதிர்கட்சியான பகுஜன் சமாஜுடன் கைகோர்க்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தள்ளார்.
இது குறித்து அவர் கணிப்புகள் வெளியான பின் முதல்வர் அகிலேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘‘ ஆட்சி அமைப்பதில் சமாஜ்வாதிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுக்க பகுஜன் சமாஜ் கட்சியுடன் கைகோர்க்கத் தயங்க மாட்டோம். ஏனெனில், குடியரசு தலைவர் ஆட்சி எனும் பெயரில் உத்தரப்பிரதேசம் பாரதியஜனதா மறைமுகப் பிடியில் சிக்குவதை எவரும் விரும்பவில்லை ’’ எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 5-ல் துவங்கி மார்ச் 8 வரை என நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் மக்களவை தேர்தலுக்கான முன்னோடியாகக் கருதப்படுகிறது. இதன் முடிவுகள் 2019-ல் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்பது பொதுவானக் கணிப்பாகவும் இருக்கிறது. இதில், பாஜகவிற்கு கிடைக்கும் வெற்றியை பொறுத்து பிரதமர் நரேந்தர மோடிக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.