
நகர செயலாளராக இருந்த ஒ.பி.எஸ் தேனீ மாவட்ட செயலாளராக மாற்ற நான்தான் ஜெயலலிதாவிடம் பரிந்துரைத்தேன் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலா தரப்பை விட்டு பிரிந்த ஒ.பி.எஸ் சசிகலா தரப்புக்கு எதிராக பல போராட்டங்களையும் சாகசங்களையும், நிகழ்த்தி வருகிறார். மேலும் சசிகலா குடும்பத்தின் அனுபவங்களை வெளிப்படையாக மக்கள் முன் ஒப்பித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனும் ஒ.பி.எஸ்க்கு ஈடு கொடுத்து பல குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார்.
அப்போது அவர் பேசியதாவது :
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுகவை மாபெரும் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
ஒ.பி.எஸ் உள்ளிட்ட சிலர் திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கின்றனர்.
அதிமுகவை எப்படியாவது வீழ்த்தி விடலாம் என்று ஒ.பி.எஸ் நினைத்து கொண்டிருக்கிறார்.
1999 ல் நகர செயலாளராக இருந்த ஒ.பி.எஸ்ஸை தேனீ மாவட்ட செயலாளராக அறிவிக்க நான்தான் ஜெயலலிதாவிடம் பரிந்துரைத்தேன்.
அவரை நான் பரிந்துரைத்ததுதான் என் முதல் தவறு என்று இப்போது நினைக்கிறேன்.
எனது கண் பாரவையிலேயே இருந்ததால்தான் ஒ.பி.எஸ்ஸை ஜெயலலிதா முதல்வராக்கினார்.
ஜெயலலிதா மறைந்த பின்னர், சசிகலாவும் ஒ.பி.எஸ்ஸையே முதல்வராக அறிவித்தார்.
ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்ற நான் அரசியலில் என்ன நடக்கிறது என்பதை கணிக்க முடியும்.
அதிமுக தொண்டர்களை எப்படியாவது குழப்பிவிடலாம் என்று ஒ.பி.எஸ் நினைக்கிறார்.
முதலமைச்சர் பொறுப்பையும் சசிகலாவே ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தியவர்தான் ஒ.பி.எஸ்.
பன்னீர்செல்வம் கூறிய பொய்யை நம்பி சில எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் நடுரோட்டில் நிற்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.