அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு..!

By vinoth kumarFirst Published Sep 22, 2021, 2:56 PM IST
Highlights

பேறுகால விடுப்பு 12 மாதமாக உயர்த்தப்பட்ட நிலையில், கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பில் சென்றால், அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்று, அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பில் சென்றால் அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அரசு பணியில் உள்ள தாய்மார்கள் தங்களில் பச்சிளம் குழந்தைகளை பேணி காப்பதற்காக அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விடுப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. 1980-ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை, கடந்த 2011-ஆம் ஆண்டில் 6 மாதங்களாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார். இதன்பின் பேறுகால விடுப்பு 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்று 2016-ம் ஆண்டில் ஜெயலலிதா சட்டப்பேரவை விதி 110 கீழ் அறிவித்திருந்தார். இதனிடையே, இந்த மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிப்படி, சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையில் மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பேறுகால விடுப்பு 12 மாதமாக உயர்த்தப்பட்ட நிலையில், கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பில் சென்றால், அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்று, அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

click me!