ஜெயக்குமார் போல் சந்து முனையில் சிந்து பாட தெரியாது..! இறங்கி அடித்த மருது அழகுராஜ்

By Ajmal KhanFirst Published Jul 7, 2022, 1:07 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமாரின் பேச்சால் தான் அதிமுகவிற்கு பேரழிவு என அதிமுக நிர்வாகி மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார்
 

ஒற்றை தலைமை- தொடரும் பிரச்சனை

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதன் காரணமாக அதிமுகவில்  ஓபிஎஸ்-இபிஎஸ் என இரண்டு பிளவாக பிளவு பட்டு உள்ளது. அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டும் நடவடிக்கையில் இபிஎஸ் அணி  தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைப்பாளராக  ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டதை பொதுக்குழுவில் அங்கீகரிக்காமல் இபிஎஸ் அணியினர் நிராகரித்தனர். அடுத்த கட்டமாக  நமது அம்மா நிறுவனர் பதவியில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்கியும் உள்ளனர். இதனை தொடர்ந்து அவரது ஆதரவாளராக கருதப்பட்ட நமது அம்மா ஆசிரியர் மருது அழகுராஜ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். இது போன்ற அடுத்தடுத்த சம்பவங்களால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து கொடநாடு கொலை, கொள்ளை பிரச்சனை தொடர்பாக கவிதை வடிவில் அறிக்கை ஒற்றை மருது அழகு ராஜ் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக அதிமுகவில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. 

உதயநிதிக்கு பதவியா..? திமுகவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே போல் MLAக்கள் வெளியே வருவார்கள்- வேலூர் இப்ராஹிம்

நமது அம்மா விளம்பர பணம் எங்கே செல்கிறது..? 

இதற்கு பதிலடி கொடுக்கும்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மருது அழகுராஜை விமர்சித்து கருத்து தெரிவித்தார்.  அதில் நமது அம்மா பத்திரிக்கை விளம்பர பணத்தை மருது அழகுராஜ் ஆட்டையை போட்டதாக தெரிவித்தார். மருது அழகுராஜ் கூலிக்காக மாரடிப்பவர் என்றும் சர்வ கட்சிக்கும் சென்றுவந்தவர் என விமர்சித்தார்.  இந்த மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் ஜெயக்குமாருக்கு பதில் அளிக்கும் வகையில் மருது அழகுராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது,  நமது அம்மா ஆசிரியர் பொறுப்பிற்கும், விளம்பரத்திற்கும் சம்பந்தமும் இல்லையென தெரிவித்தார்.  நமது அம்மா பத்திரிக்கை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு என்று கூறுகிறார்கள், உண்மையிலேயே அது முன்னாள் அமைச்சர் வேலுமணியின் பினாமி  சந்திரசேகர் என்பவருடையது என தெரிவித்தார்.  அதிமுக தொண்டர்கள் விளம்பரமாக கொடுக்கும் கோடிக்கணக்கான பணம் அதிமுகவிற்கு செல்வதில்லையென்றும், சந்திரசேகருக்கு தான் செல்வதாகவும் தெரிவித்தார்.

கூலிக்கு மாரடிப்பதாக தன்னை ஜெயக்குமார் விமர்சித்ததாக தெரிவித்தவர்,   கூலிக்கு மாரடிப்பது என்ன தவறா என கேள்வி எழுப்பினார். நாட்டில் 80% பேர் கூலிக்கு தான் வேலை பார்த்து வருவதாக கூறினார். ஜெயக்குமார் சபாநாயகராக பொறுப்பேற்ற போது  ஏற்புரை எழுதிக் கொடுத்ததாகவும், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த போதும் நான் தான் அறிக்கையை எழுதி கொடுத்ததாகவும்  தெரிவித்தார்.

பெண்கள் விவகாரத்தில் ஜெயக்குமார் எப்படிப்பட்டவர் தெரியுமா? ரகசியத்தை உடைத்த கோவை செல்வராஜ்..!

அதிமுக அழிவுக்கு ஜெயக்குமார் காரணம்
 
சட்டமன்ற தேர்தலில் அதிமுக தென் மாவட்டங்கள் படுதோல்வி அடைந்ததாக தெரிவித்தவர், 3%  வாக்குகளை அமமுக பிரித்து சென்றதும் ஒரு காரணமாகவே பார்க்கப்பட்டதாக கூறினார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் விலக்கிவிட்டால் நிலைமை இதை விட மோசமாக மாறிவிடும் என தெரிவித்தார்.  ஜெயக்குமார் எப்பொழுது மைக் பிடித்து பேச ஆரம்பித்தாரோ அப்போதே அதிமுகவுக்கு சனி பிடித்து விட்டதாக தெரிவித்தவர்,  ஜெயக்குமார் போல் சந்தில் சிந்து பாட மாட்டேன் என்றும், எதுவாக இருந்தாலும் மெயின் ரோட்டில் சந்திப்பேன் என கூறினார்.  ஒற்றை தலைமை விவகாரம் தற்போது ஆரம்பித்தது இல்லை என்று தெரிவித்தவர், அதிமுக ஆட்சியில் இருந்து விலகியதும் தொடங்கி விட்டதாக கூறினார்.  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல்  நட்சத்திர அந்தஸ்து இல்லாத காரணத்தால் ஒற்றை தலைமை எடுபடாது என்று தெரிவித்தவர்,  அதிமுகவில் இரட்டை தலைமை தான் நல்லது என்றும்  அப்போதுதான் அதிமுக வெற்றி பெறும் எனவும் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்

எஸ்.பி.வேலுமணியின் நிழல் சந்திரசேகர் வீட்டில் 20 மணி நேரமாக தொடரும் சோதனை..! முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்


 

click me!