ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி பங்கேற்பு..! செண்டை மேளம் வாசித்து உற்சாகம்

By Ajmal KhanFirst Published Nov 3, 2022, 12:05 PM IST
Highlights

சென்னையில் நடைபெற்ற மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் இல. கணேசன் இல்ல விழாவில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, நடிகர் ரஜினி காந்த் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். 
 

சென்னையில் மம்தா பானர்ஜி

மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் இல்லத்தில் நடைபெறும் விழாவிற்கு சென்னை வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு நேற்று சென்று அவரை சந்தித்தார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மம்தா பானர்ஜியை பொன்னாடைப் போர்த்தி வரவேற்றார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மு.க. ஸ்டாலின் என்னுடைய சகோதரர் மாதிரி. மரியாதை நிமித்தமாக வந்து சந்தித்தேன். சகோதரர் சகோதரி இடையேயான  மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என மம்தா பானர்ஜி  கூறினார்.

சென்னை வந்துள்ள மம்தா பானர்ஜி... முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்தித்து பேச்சு!!

 

இல.கணேசன் இல்ல விழா

இதனையடுத்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் இல.கோபலனின் சதாபிஷேக விழா நடைபெற்றது. இல.கோபாலனுக்கு வாழ்த்து தெரிவிக்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்  உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்  நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சென்னையில் மழை பாதிப்பு என புகார் கூறும் இபிஎஸ்.! மக்களை காண ஏன் வரவில்லை..? இறங்கி அடிக்கும் சேகர்பாபு

முன்னதாக இல.கோபாலனுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி இசையை கண்டு ரசித்து ஆர்வத்துடன் இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து செண்டை மேளத்தை வாசித்து மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மேற்கு வங்கம் புறப்பட்டு சென்றார்.

இதையும் படியுங்கள்

அப்பாடா.. ஒருவழியாக தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரை அறிவித்த பொதுச்செயலாளர் துரைமுருகன்.!
 

click me!