சென்னையில் மழை பாதிப்பு என புகார் கூறும் இபிஎஸ்.! மக்களை காண ஏன் வரவில்லை..? இறங்கி அடிக்கும் சேகர்பாபு

Published : Nov 03, 2022, 11:02 AM ISTUpdated : Nov 03, 2022, 11:14 AM IST
சென்னையில் மழை பாதிப்பு என புகார் கூறும் இபிஎஸ்.! மக்களை  காண ஏன் வரவில்லை..?  இறங்கி அடிக்கும் சேகர்பாபு

சுருக்கம்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மழை பாதிப்பு தொடர்பாக எந்த குறை கூறினாலும் எங்களின் பணி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். மத்திய  அரசுக்கு பயந்து, பயந்து ஆட்சியை நடத்தியது அதிமுக தான் எனவும் திமுக இல்லையென  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 

வட சென்னையில் மழை பாதிப்பு

வட கிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் பல நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக சென்னை வட கிழக்கு பருவமழையை எவ்வாறு எதிர்கொள்ளும் என்ற கேள்வி அனைத்து தரப்பு மத்தியில் எழுந்தது. இந்தநிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கினாலும் ஒரு சில மணி நேரத்தில் மழைநீர் வடிகாலில் சென்றது. இருந்த போதும்  வடசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. பெரம்பூர், வியாசர்பாடி, பட்டாளம், புளியந்தோப்பு, கொளத்தூர்  உள்ளிட்ட பகுதிகள் அதிகம் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில், மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக  அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனைகூட்டம் சென்னையில் நடைபெற்றது.  இதில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்,

அண்ணாமலை தான் சிறுபிள்ளைத்தனமாக அரசியல் செய்கிறார் பார்த்தா.. ஆளுநரும் அப்படியே செய்யலாமா? விளாசும் KS.அழகிரி

95% மழை நீர் வெளியேற்றம்

இதனை தொடர்ந்து வட சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் தேங்கியிருந்த நீரை அகற்றவும் அறிவுறுத்தினார்.  இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் 95 % வெளியேற்றப்பட்டுள்ளது. அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். சுகாதாரப்பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில்  மருத்துவ முகாம்கள் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாக கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கியதாக கூறினார். தற்போது தண்ணீர் நின்ற அனைத்து இடங்களிலும் ஒரு சொட்டு கூட இந்தாண்டு தண்ணீர் நிற்கவில்லை என குறிப்பிட்டார். 

மதவெறியை கிளப்ப திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ்..! பேரணிக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்- கே.பாலகிருஷ்ணன்

மத்திய அரசுக்கு பயந்தது யார்.?

வட சென்னை பகுதியல் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், வட சென்னை தாழ்வான பகுதி என்பதாலும், மக்கள் அதிகளவில் இருப்பதாலும் மழைநீர் தேங்குவதற்கு காரணமாக அமைந்ததாக விளக்கமளித்தார்.கொசஸ்தலை ஆறு சீரமைக்கும் பணியை திமுக அரசு தொடங்கியுள்ளது எனவும்  40 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மழை பாதிப்பு தொடர்பாக எந்த குறை கூறினாலும் எங்களின் பணி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். மத்திய  அரசுக்கு பயந்து, பயந்து ஆட்சியை நடத்தியது அதிமுக தான் எனவும் திமுக இல்லையென  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

திமுக - ஆளுநர் இடையே மோதல்.! இன்று அவசரமாக டெல்லி செல்கிறார் ஆர்.என்.ரவி.! உள்துறை அமைச்சரை சந்திக்க திட்டமா.?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!