திமுக - ஆளுநர் இடையே மோதல்.! இன்று அவசரமாக டெல்லி செல்கிறார் ஆர்.என்.ரவி.! உள்துறை அமைச்சரை சந்திக்க திட்டமா.?

By Ajmal KhanFirst Published Nov 3, 2022, 9:54 AM IST
Highlights

தமிழக அரசுக்கும் - ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில், இன்று காலை விமானம் மூலம் ஆளுர் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு- ஆளுநர் மோதல்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.  நீட் விலக்கு மசோதாவிற்கு எதிராக தமிழக அரசு இரண்டு முறை சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியும் அதனை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தை தமிழக முதலமைச்சருக்கு புறக்கணித்தார். இதனை தொடர்ந்து தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் நடத்தினார். இது போன்ற காரணங்களால் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு அதிகரித்தது.

தமிழக அரசை விமர்சித்த ஆளுநர்

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் இந்துத்துவா மற்றும் ஆர்எஸ்எஸ்  சித்ததாந்தகளை ஆளுநர் வெளிப்படுத்துவதாக அமைச்சர்களே வெளிப்படையாக புகார் கூறினர். மேலும் திருக்குறளில் ஆன்மிகம் மறைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்திருந்தார். கோவை கார் வெடி விபத்து தொடர்பாக ஆளுநர் தமிழக அரசை விமர்சித்தது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தமிழக ஆளுநர் அரசியல் அமைப்புக்கு எதிராக பேசுவதாக திமுக கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தது. மேலும் ஆளுநரை நீக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதனையடுத்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் புகார் அளிக்க திட்டமிட்டனர். இதற்காக எம்பிக்களிடம் கையெழுத்து வங்கும் பணியை திமுக தலைமை தொடங்கியுள்ளது. விரைவில் குடியரசு தலைவரை சந்தித்து புகார் அளிக்கவும் உள்ளது.

அவசரமாக டெல்லி சென்ற ஆளுநர்

இந்தநிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை விமானம் மூலம் டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு தொடர்பாகவும், தமிழக சட்ட ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக அறிக்கை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

மதவெறியை கிளப்ப திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ்..! பேரணிக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்- கே.பாலகிருஷ்ணன்
 

click me!