எம்.ஜி.ஆர். தொகுதியில் போட்டியில்லை.... பாஜக, காங்கிரஸை எதிர்த்து கமல் ஹாசன் போட்டி... எந்த தொகுதி தெரியுமா?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 12, 2021, 01:51 PM IST
எம்.ஜி.ஆர். தொகுதியில் போட்டியில்லை.... பாஜக, காங்கிரஸை எதிர்த்து கமல் ஹாசன் போட்டி... எந்த தொகுதி தெரியுமா?

சுருக்கம்

 இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கமல் ஹாசன் வெளியிட்டார். 

தமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணிக்கு அடுத்து மூன்றாவதாக ஒரு கூட்டணியை அமைக்கும் முயற்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஈடுபட்டுள்ளார். சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினரால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி , ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் கமலின் தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளன.

 

இந்த கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 154 தொகுதிகளும், சமத்துவ மக்கள் கட்சிக்கும் இந்திய ஜனநாயகக் கட்சிக்கும் தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம்  கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு முதற்கட்டமாக 70 பேரின் பெயர்கள் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டார். 

இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கமல் ஹாசன் வெளியிட்டார். இதற்கு முன்னதாக எம்.ஜி.ஆர். அவர்கள் போட்டியிட்ட ஆலந்தூர் தொகுதியில் கமல் ஹாசன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அவர் வெளியிட்ட பட்டியலின் படி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளது தெரியவந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது, அதேபோல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!