கடைசி நேரத்தில் டிக் அடிக்கப்பட்ட உதயநிதி... சேப்பாக்கத்தில் கசையடி தோல்வி கொடுப்பாரா கஸ்ஸாலி..?

By Thiraviaraj RMFirst Published Mar 12, 2021, 1:25 PM IST
Highlights

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக சார்பில் கஸ்ஸாலி போட்டியிருக்கிறார்.

முதன்முறையாஜ திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு நேற்றுடன் நிறைவடைந்திருக்கும் நிலையில் இன்று திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தொகுதியில் நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட உள்ளார்.

சேப்பாக்கம் தொகுதியில் தான் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்பமனு அளித்த போதே அவருக்கு அத்தொகுதி ஒதுக்கப்படும் என அரசியல் நோக்கர்கள் கருதினர். முன்னதாக அத்தொகுதியில் யார் போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெறச் செய்வதே என் இலக்கு என்றும் தனக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

உதயநிதியின் வருகையை ஸ்டாலின் விரும்பவில்லை, திமுக மூத்த உறுப்பினர்கள் விரும்பவில்லை என்றெல்லாம் செய்திகள் வெளியான நிலையில் தற்போது உதயநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வேறு வேட்பாளர்கள் யாரும் போட்டியிட விரும்பவில்லை. இந்த நிலையில் கடைசி நேரத்தில்தான் உதயநிதி நேர்காணலில் கலந்து கொண்டார். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக சார்பில் கஸ்ஸாலி போட்டியிருக்கிறார்.

click me!