சீட் கிடைக்காததால் விரக்தி... திமுகவில் இணையும் அதிமுக முக்கியப்புள்ளி..!

By Thiraviaraj RMFirst Published Mar 12, 2021, 1:13 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர் என்ற முறையிலும் தனக்கு சீட் வாங்கி  தருமாறு மூத்த அமைச்சர்களிடம் காய் நகர்த்தி வந்தார். ஆனால் சீட் கிடைக்காததால் அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

பரமக்குடி தொகுதியில் இம்முறை சிட்டிங் எம்எல்ஏவுக்கு எதிராக மாஜி அமைச்சர் உட்பட பலர் வரிந்துக் கட்டி நின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில், பரமக்குடி மட்டும் தனி தொகுதியாக உள்ளது. பரமக்குடி நகர், பரமக்குடி,  நயினார்கோவில், போகலூர் உள்ளிட்ட ஒன்றியங்களும், கமுதி ஒன்றியத்தில்,  அபிராமம் பேரூராட்சி மற்றும் மண்டல மாணிக்கம் உள்ளிட்ட பகுதிகள்  தொகுதிக்குள் உள்ளன. பரமக்குடி  தொகுதியில் கடந்த 2016ல் அதிமுக சார்பாக டாக்டர் முத்தையா  வெற்றி பெற்றார். பின்னர் அவர் டி.டி.வி.தினகரன் பக்கம் சென்றதால் பதவியை  இழந்தார். இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற இடைத்தேர்தலில்  மாநில அம்மா பேரவை  இணைச்செயலாளர் சதன் பிரபாகர் வெற்றி பெற்றார். அவருக்கே இம்முறையும் சீட் 

 இத்தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட முன்னாள் அமைச்சர்  சுந்தரராஜை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து, சீட் பெற்றுத் தரவேண்டும் என ஒருகுரூப் முயற்சி செய்தது. முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன் மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வு  செய்யப்பட்டு, அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர். கட்சியினருக்கு  நன்கு  தெரிந்தவர். ஆனால் 2016 மற்றும் இடைத்தேர்தலில் சீட் கிடைக்கவில்லை  என்பதால் கட்சிப்பணிகளில் ஈடுபடவில்லை.

கொரோனா  காலகட்டங்களில்  கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் எந்த உதவியும் செய்யவில்லை என  கட்சியினரிடையே பலத்த எதிர்ப்பு இருந்து வந்தது. ஆனால், எந்த வேட்பாளர்  எதிர்த்து நின்றாலும், போட்டியை உருவாக்குபவராக சுந்தரராஜன் செயல்படுவார்  என்ற எண்ணமிருந்தது. மாவட்ட செயலாளர் சீட்டு வாங்கி தருவார் என்ற  நம்பிக்கையிலும், முன்னாள் அமைச்சர் என்ற முறையிலும் தனக்கு சீட் வாங்கி  தருமாறு மூத்த அமைச்சர்களிடம் காய் நகர்த்தி வந்தார். ஆனால் சீட் கிடைக்காததால் அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

click me!