அதிமுக அமைச்சர்களை அலறவிட்ட ஸ்டாலின்... கெத்து காட்டும் திமுக வேட்பாளர்கள் பட்டியல்...!

By vinoth kumarFirst Published Mar 12, 2021, 12:44 PM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதில், மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதில், மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுடன் திமுக கூட்டணியை இறுதி செய்துவிட்டது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும், இ.யூ.முஸ்லிம் லீக், கொமதேகவுக்கு  தலா 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. 

அதேபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சிக்கு ஒரு தொகுதியும் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டன. இந்த வகையில் 61 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, எஞ்சிய 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதன்மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 61 தொகுதிகளில் 14 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. எனவே, திமுக போட்டியிடும் 173 பிளஸ் 14 தொகுதிகளையும் சேர்த்தால், உதயசூரியன் சின்னம் 187 தொகுதிகளில் களம் காண்கிறது. 

இந்நிலையில்,  கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் பெரும்பாலும் வெளியாகிவிட்ட நிலையில் தலைமை தாங்கும் திமுக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.  

தி.மு.க. போட்டியிடும் 173 தொகுதிகள் விவரம் வெளியீடு

 

click me!