10வது முறையாக காட்பாடி தொகுதியில் துரைமுருகன்.. வரலாறு படைக்கும் திமுக ..

By Ezhilarasan BabuFirst Published Mar 12, 2021, 1:35 PM IST
Highlights

காட்பாடி தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர், முதலியார்,  நாயுடு, ஆதிதிராவிட சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த துரைமுருகன் அதிக செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

சட்ட மன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில் திமுக  பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்  10வது முறையாக காட்பாடி சட்டமன்ற  தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.  இதற்காக விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக,  மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி என மெகா கூட்டணி அமைத்துள்ள திமுக மொத்தம் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

அதேபோல் கூட்டணி கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுடன் மொத்தம் 187  வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  காட்பாடி தொகுதியில் 10வது முறையாக போட்டிருக்கிறார். 11 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள துரைமுருகன்  9 முறை காட்பாடி தொகுதியிலும், 2 முறை ராணிப்பேட்டை தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார். தற்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவர் அங்கு 10வது முறையாக களம் காண்கிறார். 

காட்பாடி தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர், முதலியார்,  நாயுடு, ஆதிதிராவிட சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த துரைமுருகன் அதிக செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று முறை அமைச்சர் பதவி வகித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சொந்த தொகுதியான காட்பாடியில்  1971- 76. 1989-91 மற்றும் 1996 முதல் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் 10வது முறையாகவும் களம் காண்கிறார். இதனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில், காட்பாடி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்று விளங்குகிறது.  
 

click me!