எங்கு போட்டியிடுகிறார் கமல் ஹாசன்?.... இன்று வெளியாகிறது 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 12, 2021, 10:38 AM IST
Highlights

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட உள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணிக்கு அடுத்து மூன்றாவதாக ஒரு கூட்டணியை அமைக்கும் முயற்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஈடுபட்டுள்ளார். சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினரால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி , ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் கமலின் தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளன. 

இந்த கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 154 தொகுதிகளும், சமத்துவ மக்கள் கட்சிக்கும் இந்திய ஜனநாயகக் கட்சிக்கும் தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம்  கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு முதற்கட்டமாக 70 பேரின் பெயர்கள் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டார். 

மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்துள்ள தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு முதற்கட்டமாக செங்கல்பட்டு, காட்பாடி, வேப்பனஹள்ளி, திருவாரூர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியுடன் இன்று  ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதற்கிடையே மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட உள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்றும், இதில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்படும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமாரவேல் தெரிவித்துள்ளார். 

click me!