சிபிஎம் போட்டியிடும் தொகுதிகள் எவை..? அதிமுகவுடன் 5; பாமகவுடன் 1 தொகுதியில் மல்லுக்கட்டு..!

Published : Mar 12, 2021, 08:43 AM IST
சிபிஎம் போட்டியிடும் தொகுதிகள் எவை..? அதிமுகவுடன் 5; பாமகவுடன் 1 தொகுதியில் மல்லுக்கட்டு..!

சுருக்கம்

திமுக கூட்டணியில் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) போட்டியிடும் தொகுதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிபிஎம் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது தொடர்பாக திமுக குழுவுடன் சிபிஎம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. சில தொகுதிகளைப் பெறுவதில் இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், நேற்று இரவு சிபிஎம்-திமுக இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று கையெழுத்தாகின.
இதன்படி மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி, திருப்பரங்குன்றம், அரூர், கந்தவர்வகோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் கீழ்வேளூர் தொகுதியில் பாமகவை எதிர்த்து சிபிஎம் களமிறங்கிறது. எஞ்சிய 5 தொகுதிகளில் அதிமுகவுடன் மல்லுக்கட்டுகிறது சிபிஎம்.

PREV
click me!

Recommended Stories

Free Training: விவசாயிகள், இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! தமிழ்நாடு அரசு தரும் இலவச பயிற்சி.! இனி லாபம் கொட்டப்போவது உறுதி.!
G Square:ஜி ஸ்கொயர் நிறுவனர் அறிவித்த அதிரடி ஆஃபர்.! பரந்தூரில் ஒரு சென்ட் நிலம் இருந்தாலும் நிரூபியுங்கள்.! 50% பங்கு தருகிறேன்.!