பொறுத்தார் பூமி ஆள்வார்..! தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜி.கே.வாசன்..!

By Selva KathirFirst Published Mar 12, 2021, 10:37 AM IST
Highlights

பிரேமலதாவை போல் தங்களை ஏன் கூட்டணிப்பேச்சுக்கு அழைக்கவில்லை என்றெல்லாம் அவசரப்படாமல் பொறுமையாக இருந்த ஜி.கே.வாசனுக்கு யாரும் எதிர்பாராத வகையில் 6 தொகுதிகளை தூக்கிக் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

பிரேமலதாவை போல் தங்களை ஏன் கூட்டணிப்பேச்சுக்கு அழைக்கவில்லை என்றெல்லாம் அவசரப்படாமல் பொறுமையாக இருந்த ஜி.கே.வாசனுக்கு யாரும் எதிர்பாராத வகையில் 6 தொகுதிகளை தூக்கிக் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக கூட்டணியில் கட்சிகளின் செல்வாக்கிற்கு ஏற்ப கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு பிறகு அ திக வாக்கு வங்கி கொண்ட கட்சியாக கடந்த 2016 தேர்தலில் வாகை சூடிய பாமகவிற்கு முதலில் தொகுதிப்பங்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. மூன்றாவதாக தேமுதிகவை அழைத்த நிலையில் இழுபறி நீடித்தது. இந்த கால கட்டத்தில் த.மா.காவுடன் கூட்டணி தொடர்பாக பேச அதிமுக ஆர்வம் காட்டவில்லை. தேமுதிகவை முடித்துவிட்டு த.மா.காவை அழைப்பதாக அதிமுக தரப்பு கூறி வந்தது.

அந்த வகையில் தேமுதிகவுடன் சுமார் மூன்று நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் த.மா.கா தரப்பில் இருந்து யாரையும் அதிமுக அழைக்கவில்லை. ஆனால் இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் ஜி.கே.வாசன் அமைதி காத்து வந்தார். தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை போல் தங்களை ஏன் கூட்டணிக்கு அழைக்கவில்லை, தங்களை ஏன் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றெல்லாம் அவர் செய்தியாளர்களை அழைத்து பேட்டி தரவில்லை. மாறாக மறுபடியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அதிமுக அரசு அமைய வேண்டும் என்று பேட்டி கொடுத்து வந்தார் ஜி.கே.வாசன்.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் தேமுதிகவுடன் மிகவும் இழுபறி காணப்பட்டது. இதனால் அவர்களை பெண்டிங்கில் வைத்துவிட்டு வாசன் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது அதிமுக. அதன்படி கோவை தங்கம் உள்ளிட்டோர் சென்று அமைச்சர் தங்கமணியை சந்தித்தனர். அப்போது த.மா.கா தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகவும் எனவே தங்களுக்கு குறைந்தது 12 தொகுதிகள் தேவை என்று த.மா.கா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையை காரணம் காட்டி த.மா.காவிற்கு 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டது.

இதனை அடுத்து சிறிது ஜர்க் ஆன வாசன் மறுபடியும் டென்சன் ஆகாமல் பொறுமை காத்து வந்தார். குறைந்தபட்சம் 9 தொகுதிகளாவது வேண்டும் என்று வாசன் இங்கி வந்த நிலையிலும் அதிமுக 3 தொகுதிகளில் உறுதியாக இருந்து வந்தது. இந்த நிலையில் தான் ஜி.கே.வாசனின் த.மா.க அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது. இதனால் அந்த கட்சிக்கு என்று அதிமுக கணக்கு போட்டு வைத்திருந்த 13 தொகுதிகள் கூடுதலாக அவர்கள் வசம் இருந்தது. இதனை பயன்படுத்தி வாசன் தரப்பு மறுபடியும் 12 தொகுதிகள் என கேட்க ஆரம்பித்தது. ஆனால் இதுநாள் வரை 3 தொகுதிகள் என கூறி வந்த அதிமுக அதிரடியாக தொகுதிகளின் எண்ணிக்கையை 5ஆக உயர்த்தியது.

இதற்கு காரணம் தொகுதிகளை காரணம் காட்டி வாசன் கூட்டணியில் இருந்து விலகிவிடக்கூடாது என்பது தான். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிவிட்டத. மேலும் ஒரு கட்சி விலகினால அது அரசியல் ரீதியாக நெருக்கடியை ஏற்படும் என்பதால் த.மா.காவிற்கு 5 தொகுதிகளை கொடுக்க அதிமுக முன்வந்தது. ஆனால் இதனை பயன்படுத்தி தொகுதிகளின் எண்ணிக்கையை எப்படியும் 7ஆக உயர்திதிவிட வேண்டும என்று வாசன் காய் நகர்த்தினார். உடனடியாக 5 தொகுதிகளுக்கு ஓகே சொல்லாமல் தொடர்ந்து 9 தொகுதிகளை கோரி வந்த வாசன் பிறகு 7 தொகுதிகளாக இறங்கி வந்த நிலையில் அதிமுகவும் ஒரு தொகுதியை கூட்டி 6ஆக ஒதுக்கியது.

இதற்காகவே காத்திருந்த வாசன் 6 தொகுதிகளுக்கு ஓகே சொன்னதுடன் உடனடியாக தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டார். இதன் மூலம் பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதை நிரூபித்துள்ளார் வாசன்.

click me!