வானதி சீனிவாசன் கோமாவில் இருந்தாரா..? இல்லை செலக்டிவ் அம்னீசியா வந்து தவித்துக் கொண்டிருந்தாரா..? மநீம கேள்வி

By Ajmal Khan  |  First Published Feb 17, 2023, 12:17 PM IST

அதிமுகவோடு பின்னிப் பிணைந்து, ஒட்டி உறவாடிக் கொண்டு கடந்த பத்தாண்டுகளில் அதிமுக செய்த அத்தனை அயோக்கியத்தனங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, தற்போது தான் ஞானோதயம் வந்தவர் போல் வானதி சீனிவாசன் பேசுவது ஏற்புடையதல்ல என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது


வானதிக்கு செலக்டிவ் அம்னீசியாவா

கோயில்கள் இடிக்கப்படுவதாகவும், ஈரோடு தேர்தலில் அமைச்சர்கள் முகாமிட்டுள்ளது தொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறிய கருத்திற்கு மக்கள் நீதிமய்யம் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் பொன்னுசாபி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழக அரசு கோவில்களை மட்டுமே இடிப்பதாகவும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் செயல்படுவதால் அரசு இயந்திரம் முற்றிலுமாக முடங்கிப் போயிருப்பதாகவும் கூறியிருப்பதன் மூலம் பாஜகவின் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்  தனக்கு செலக்டிவ் அம்னீசியா வந்திருப்பதை உறுதி செய்துள்ளார்.

Latest Videos

ஒரு கோடி ரூபாய் கேட்டது உண்மைதான்.! அது எனது குரல் தான்..! ஆனால் திடீர் ட்விஸ்ட் கொடுத்த கேபி முனுசாமி

கோயில், தேவாலயங்கள் இடிப்பு

ஏனெனில் பாஜகவோடு கூட்டணியில் உள்ள அதிமுக ஆட்சி செய்த கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் முழுவதும் சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் எண்ணற்ற இந்து கோவில்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும் இடிக்கப்பட்ட போதும், அப்போதைய காலகட்டங்களில் பல்வேறு தொகுதிகளில் இடைத்தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற சமயத்திலும் அப்போதைய ஒட்டுமொத்த அமைச்சரவையும் தேர்தல் பணிகளை மேற்கொண்டதால் அரசு இயந்திரம் முற்றிலுமாக முடங்கிப் போனதையும், மக்கள் நலப்பணிகள் நடைபெறுவதில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டதையும் திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள் எப்படி அவ்வளவு எளிதில் மறந்து போனார் என தெரியவில்லை..?

அதிமுகவுடன் உறவாடிய பாஜக

ஒருவேளை அந்த கடந்த பத்தாண்டுகளில் அவர் கோமா நிலையில் இருந்தாரா..? இல்லை செலக்டிவ் அம்னீசியா வந்து தவித்துக் கொண்டிருந்தாரா..? என்பது மோடியாருக்கும், அமித்ஷாயாருக்கும், அண்ணாமலையாருக்குமே வெளிச்சமாகும். தங்களது கூட்டணியில் உள்ள அதிமுகவோடு பின்னிப் பிணைந்து, ஒட்டி உறவாடிக் கொண்டு கடந்த பத்தாண்டுகளில் அதிமுக செய்த அத்தனை அயோக்கியத்தனங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, தற்போது தான் ஞானோதயம் வந்தவர் போல் வானதி சீனிவாசன் பேசுவது ஏற்புடையதல்ல.

நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இபிஎஸ்ஐ வச்சு செய்த பிரபல இயக்குனர்..!

இரும்பு கரம் கொண்டு ஒடுக்கிடுக

ஆனால் சாலையோரம் மட்டுமல்ல மக்களின் சொத்துகளை, அரசு நிலங்களை ஆக்ரமித்திருக்கும் ஆக்ரமிப்பாளர்களை அகற்றும் போது மதத்தின் பெயரால் அதனை தடுக்க நினைப்பவர்களும், கடவுளின் பெயரால் மக்களை தூண்டி விட்டு குளிர்காய நினைப்பவர்களும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டியவர்கள் என்பதை மக்கள் பிரதிநிதியான பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்கள் மறுக்க மாட்டார் என நினைக்கிறேன். ஏனெனில் அரசு என்பது மக்களுக்கானது தானே தவிர சாதி, மதங்களுக்கானதல்ல என்பதை அவர் புரிந்து கொண்டு பேசுவதே ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அழகாகும் என பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

கட்டட முடிவு சான்று இல்லாமலே மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் வசதி பெறலாம்.! நகராட்சி துறை புதிய உத்தரவு

click me!