கடந்த 8-ம் தேதி பிரபாகரன் பொது குடிநீர் தொட்டி அருகே துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு சென்ற பேரூராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் சின்னசாமி (58) இது என்ன துணிகள் துவைக்கும் இடமா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், சின்னசாமிக்கும் அங்கு வந்த பிரபாகரனின் தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது பயத்தையும் கவலையையும் தருகிறது என பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பூ கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ராணுவ வீரர்கள் பிரபாகரன் (31). இவரது சகோதரர் பிரபு (28). இவரும் விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களுக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தனர். இந்நிலையில், கடந்த 8-ம் தேதி பிரபாகரன் பொது குடிநீர் தொட்டி அருகே துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு சென்ற பேரூராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் சின்னசாமி (58) இது என்ன துணிகள் துவைக்கும் இடமா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், சின்னசாமிக்கும் அங்கு வந்த பிரபாகரனின் தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இதுகுறித்து மீண்டும் அன்றைய தினம் மாலை சின்னசாமி, அவரது மகன்கள் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டியன் மற்றும் சிலர் பிரபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
undefined
அப்போது, ஆத்திரமடைந்த சின்னசாமி தரப்பினர், தாங்கள் வைத்திருந்த கத்தி, உருட்டைக்கட்டை, இரும்புக் கம்பியால் பிரபாகரன் மற்றும் அவரது தம்பி பிரபு, தந்தை மாதையன் ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பிரபு சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திமுக கவுன்சிலர் சின்னசாமி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். ராணுவ வீரரை திமுகவினர் அடித்து கொலை செய்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த கொலையில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. தாக்கியவர்கள், காயமடைந்தவர்கள், உயிரிழந்த ராணுவ வீரர் அனைவரும் நெங்கிய உறவினர்கள்தான். சாதாரணமாக தொடங்கிய சண்டை கைகலப்பாக மாறி கொலையில் முடிந்துள்ளது. இதனை சில அரசியல் கட்சிகள் கொலை என வதந்தி பரப்பி வருகின்றனர். அப்படி வதந்தி பரப்புவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சரோஜ் குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
Where are we heading ? A serving soldier has been murdered by a DMK functionary. Shame on us if we remain silent even now. avl, is this the much hyped vidiyal people voted for? Goondaism & failing law & order in my State in scaring & worrying too. pic.twitter.com/7pM1hmM8KU
— KhushbuSundar (@khushsundar)இதுதொடர்பாக நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நாம் எங்கே செல்கிறோம்? பணியில் இருந்த ராணுவ வீரர் திமுக பிரமுகரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இப்போதும் மௌனமாக இருந்தால் நமக்கு வெட்கக்கேடு. இந்த விடியலுக்காக தான் மக்கள் வாக்களித்தார்களா? என முதல்வர் ஸ்டாலினுக்கு குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். என் மாநிலத்தில் குண்டர்கள் ஆட்சியும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பது பயத்தையும் கவலையையும் தருகிறது என குறிப்பிட்டு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்க்கு டேக் செய்துள்ளார்.