வேண்டுமென்றே கனிமொழி இப்படி செய்யறாங்க.. இதுக்கு போலீசும் உடந்தை.. கொதிக்கும் எடப்பாடி பழனிசாமி..!

By vinoth kumarFirst Published Feb 17, 2023, 9:02 AM IST
Highlights

தமிழ்நாட்டில் இனி ஒருபோதும் வாரிசு அரசியலுக்கு இடமில்லை. பொங்கல் பரிசு தொகுப்பை முறையாக வழங்காமல் ஊழல் செய்த அரசு விடியா அரசு. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 கொடுத்தால் என்ன என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். முதல்வர் ஆகிவிட்டார் ரூ.5000 கொடுக்க வேண்டியதுதானே? 

கவரச்சிகரமான வாக்குறுதிகளை அறிவித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு அதனை திமுக அரசு நிறைவேற்றாமல் உள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 2வது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய இபிஎஸ்;- தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் உதவித்தொகை நிறுத்தப்பட்ட முதியோர்களுக்கு வீடு வீடாகச் சென்று வழங்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்த 21 மாதங்களில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ஒரு திட்டத்தை கூட நிறைவேற்றவில்லை. தேர்தல் வந்ததும் செந்தில் பாலாஜி மக்களை சந்திப்பார், தேர்தல் முடிந்ததும் மக்களை கைகழுவி விடுவார். 520 வாக்குறுதிகளில் 85 சதவீத நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின் பச்சை பொய் கூறுகிறார் என இபிஎஸ் குற்றம்சாட்டினார். 

இதையும் படிங்க;- நீங்க கால்ல விழுந்த சசிகலாவும், ஜெயலலிதாவும் மீசை வச்சிருந்தாங்களா? ஈபிஎஸ் கருத்துக்கு கனிமொழி பதிலடி!!

இடைத்தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை கொடுக்கவில்லை என்றால் மீண்டும் இதேபோல் தான் பொய் கூறுவார்கள். நான் பிரச்சாரம் செல்லும் வழியில் வேண்டுமென்றே திட்டமிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தப்படுகிறது. எனது பிரச்சாரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கனிமொழி திட்டமிட்டு நேரத்தை தவறி பிரச்சாரத்திற்கு வருவதாக குற்றம்சாட்டினார். எனது பிரச்சாரத்திற்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு காவல்துறையும் துணை போகிறது. 

மேலும், வாக்காளர்கள் கொட்டகையில் அடைக்கப்படவில்லை என தேர்தல் அதிகாரி பச்சைப் பொய் கூறுகிறார். கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. நாங்கள் அனைத்தையும்  பதிவு செய்து வைத்துள்ளோம். நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்போம். வாக்காளர்களை எங்கு அடைத்து வைத்தாலும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வெற்றி உறுதி என்றார். 

இதையும் படிங்க;- ரொம்ப அதிர்ச்சியா இருக்கு! கோர்ட் வளாகத்திலேயே இப்படியா? சட்டம்-ஒழுங்கு சீரழிந்து போச்சு! திமுகவை விளாசும் BJP

தமிழ்நாட்டில் இனி ஒருபோதும் வாரிசு அரசியலுக்கு இடமில்லை. பொங்கல் பரிசு தொகுப்பை முறையாக வழங்காமல் ஊழல் செய்த அரசு விடியா அரசு. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 கொடுத்தால் என்ன என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். முதல்வர் ஆகிவிட்டார் ரூ.5000 கொடுக்க வேண்டியதுதானே? ரூ.1000 தான் கொடுத்திருக்கிறார்கள். ஓட்டு கேட்க வந்தால் பாக்கி ரூ.4000 கேட்டு வாங்குங்கள். கவரச்சிகரமான வாக்குறுதிகளை அறிவித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு அதனை திமுக அரசு நிறைவேற்றாமல் உள்ளது என  எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

click me!