
அவைத்தலைவராக மதுசூதனனும் பொருளாளராக ஓ.பி.எஸ்சும் வழிநடத்தி செல்லும் கழகமே உண்மையான அதிமுக என ஓ.பி.எஸ் ஆதரவாளர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு காலியாக இருந்த ஆர்.கே. நகர் தொகுதியில் ஏபரல் 12 ஆம் தேதி இடைத்தேர்டஹ்ல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் மும்மரம் காட்டி வருகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலாவுடன் இணைந்து செயல்பட ஓ.பன்னீர் செல்வம் திடீரென அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் அ.தி.மு.க.வை சேர்ந்த சில எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் ஓ.பி.எஸ். அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் வீட்டை காலி செய்து விட்டு நேற்று வீனஸ் காலனியில் உள்ள புதிய வீட்டிற்கு வந்தார்.
ஆர் கே.நகரில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து அணி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடப்பதால் தங்களின் அணியின் பலத்தை காட்ட வேண்டிய கட்டாயம் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதால் அதற்கான தீவிர வேலைபாடுகளில் இறங்கி உள்ளார்.
இந்நிலையில் வீனஸ் காலனியில் உள்ள ஓ.பி.எஸ் வீட்டில் அவரது ஆதரவாளர் மாபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஓ.பி.எஸ் தலைமையிலான அணியே உணமையான அதிமுக.
இதை விரைவில் தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்.
கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டது, எதிர்கட்சிகள் எல்லாரையும் வெளியே அனுப்பிவிட்டு வாக்கெடுப்பு நடத்தியது, விதிமுறைகளை மீறி செயல்பட்டது, மறைமுக வாக்கெடுப்பு நடத்த வாய்ப்பிருந்தும் அதை நடத்தாதது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி மனுவாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.
எல்லா வகையான ஆதாரங்களையும் திரட்டி அடிப்படை உரிமைகள் மீறல் சரத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நல்ல முடிவுகள் விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம்.
அவைத்தலைவராக மதுசூதனனும் பொருளாளராக ஓ.பி.எஸ்சும் வழிநடத்தி செல்லும் கழகமே உண்மையான அதிமுக.
ஆர்கேநகர் தொகுதியில் யார் வேட்பாளர் என்று இன்று அறிவிக்கபடாது. மிக விரைவில் ஓ.பி.எஸ் அறிவிப்பார். அதுகுறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.