சட்டமன்ற வீடியோவை ஸ்டாலினிடம் கொடுக்க வேண்டும் - பேரவை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Asianet News Tamil  
Published : Mar 10, 2017, 01:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
சட்டமன்ற வீடியோவை ஸ்டாலினிடம் கொடுக்க வேண்டும் - பேரவை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சுருக்கம்

The Assembly must give the video to Stalin - to the High Court instructed the Council Secretary

கடந்த மாதம் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஓ.பி.எஸ். அணியினர் வலியுறுத்தினர். இதனால்,
சட்டமன்றத்தில் அமளி நடந்தது.இதையடுத்து, எதிர்க்கட்சியினர் வெளியேற்றப்பட்டனர். அப்போது, மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்க தொடர்ந்தார். அதில் சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும். சட்டமன்றத்தில் நடந்த சம்பவம்,
அங்குள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இதேபோல் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசுக்கும், சட்டமன்ற செயலாளருக்கும் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், சட்டமன்றத்தில் நடந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகளை சமர்ப்பிக்க வேண்டும் என
உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன், “சட்டமன்ற விதிகளில் ரகசிய வாக்கெடப்பு நடத்த இடம் இல்லை. சட்டமன்றத்தில் டிவிஷன் வாக்கெடுப்பு
நடந்தது. அந்த நேரத்தில், திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர்” என கூறினார்.
இதனை கேட்ட நீதிபதிகள், பேரவைச் செயலரின் பதில் மனு மீது திமுக விளக்கம் அளிக்க 2 வார கால அவகாசம் வழங்கினர். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த காட்சி அடங்கிய சிடியை ஸ்டாலினுக்கு வழங்க
உத்தரவிட்டனர்.
அதற்கு, வரும் திங்கட்கிழமை, சட்டப்பேரவையில் நடந்த சம்பவம் குறித்த காட்சிகள் அடங்கிய, விடியோ பதிவை சிடியாக ஸ்டாலினிடம் வழங்குவதாக பேரவை செயலாளர் ஜமாலுதீன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?
ADMK: அதிமுக பொதுச்செயலாளராக திருஷ்டி பரிகாரம்.! கட்சியை பிடிக்க ஹோமத்தில் இறங்கிய வேலுமணி அணி.!