அண்ணாமலை என்று எழுதுவதற்கு பெரியாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.. மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அட்வைஸ்!

By Raghupati RFirst Published Nov 6, 2022, 7:42 PM IST
Highlights

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அறிவுரை கொடுத்துள்ளார்.

இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பாக பொதுக்கூட்டம் மற்றும் மாநாடு தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சியில் மொழியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

அதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பெரியாரின் அன்றைய போராட்டம் இப்போது தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான காரணம், அது தமிழ்ச் சமூகத்தின் மேன்மைக்கான போராட்டம்.

அனைத்து அரசியல் கட்சிகள், சைவர்கள், வைணவர்கள், அமைப்புகள் என அனைவரையும் இணைத்து இது பண்பாட்டு படையெடுப்புக்கு எதிரான போராட்டம் என்ற புரிதலோடு போராடினார்.அதனால் தான் தமிழ்ச் சமூகத்தின் மொழி அரசியல் இந்திய அரசியலில் எதிரொலிக்கும் போராட்டமாக அமைந்தது. மொழிப் போராட்ட வரலாற்றில் திருச்சிக்கு பெரும் பங்கு இருக்கிறது. இந்திக்கு எதிராக தமிழ்நாட்டில் முதல் தீயை பற்றவைத்தது திருச்சி தான் என்று கூறினார்.

இதையும் படிங்க..தமிழ்நாட்டில் 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கியது.. போலீஸ் பலத்த பாதுகாப்பு !

கே. அண்ணாமலை ஒவ்வொரு முறை கையெழுத்திடும் போதும், தந்தை பெரியாருக்கும், வீரமாமுனிவருக்கும் நன்றி செலுத்திவிட்டுதான் கையெழுத்திட வேண்டும். தமிழில் நீங்கள் எழுதும் கே என்ற ரெட்ட கொம்பை மாற்றி உருவாக்கியவர் வீரமாமுனிவர் என்றும், 3 சுழி ணா என்ற வார்த்தையை மாற்றி உருவாக்கியவர் தந்தை பெரியார்.

பாஜக தலைவர் திரு. கே. அண்ணாமலை
அவர்களே, நீங்கள் ஒவ்வொருமுறை உங்களின் பெயரை எழுதும் பொழுதும் கையெழுத்திடும் பொழுதும்
வீரமாமுனிவர் என்ற கிருஸ்துவருக்கும் தந்தை பெரியார் என்ற நாத்திகருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறீர்கள்.

- திருச்சி - மொழியுரிமை மாநாட்டில் பேசியது. pic.twitter.com/AHJVaXKsDe

— Su Venkatesan MP (@SuVe4Madurai)

உங்கள் பெயரில் வரும் ணா என்ற எழுத்து சில காலத்திற்கு முன், கீழ் விலங்குடன் சேர்த்து எழுதப்படும். அந்த விலங்கை கழற்றியவர் பெரியார். அதேபோல் லை என்ற எழுத்து தும்பிக்கையுடன் எழுதப்பட்டது. அந்த தும்பிக்கையை கழற்றியவர் தந்தை பெரியார்’ என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அறிவுரை கொடுத்துள்ளார் எம்.பி சு.வெங்கடேசன்.

இதையும் படிங்க..2022ம் ஆண்டு முடிய 60 நாட்கள் தான் இருக்கு, ஆனா ? மீண்டும் சுனாமி.. நாஸ்டர்டாமஸ் கணிப்பு பகீர்

இதையும் படிங்க..மாணவிகளுக்கு சைக்கிள்.! பெண்களுக்கு ஸ்கூட்டி.! தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அள்ளிக்கொடுத்த பாஜக !

click me!