நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் தான். இணைப்புக்கான பேச்சுக்கே இடம் இல்லை- ஓபிஎஸ்யை அலற வைத்த இபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Nov 6, 2022, 3:28 PM IST

 நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. எனவே அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


மக்களை ஏமாற்றிய திமுக

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்தநிலையில் நாமக்கல், பொம்மைக்குட்டைமேட்டில் அதிமுக 51-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அதிமுக கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றிவைத்தார். இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய  இபிஎஸ்,  நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டார்கள் என விமர்சித்தார். நீட் தேர்வு ரத்துக்கான ரகசிய திட்டம் தங்களிடம் இருப்பதாக தெரிவித்தார்கள் ஆனால் அது என்ன ஆனது என கேள்வி எழுப்பினார்.

Tap to resize

Latest Videos

அவதூறுகளை அள்ளிவீசி உண்மையை மறைக்க சி.வி.சண்முகம் திட்டம்..? இறங்கி அடிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

நீட் தேர்வு விலக்கு என்ன ஆச்சு

தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த  வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாகவும் எந்த வாக்குறுதியையும் முழுமையாக நிறைவேற்றவில்லையென விமர்சித்தார். பெண்களுக்கு மாதம் 1000ரூபாய் வழங்குவதாக தெரிவித்தனர். ஒன்றரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அதன் நிலை என்ன என வினவினார். கிராமத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவம் படிப்பதற்கு அதிமுக தான் காரணம் என கூறினார். எதிர்கட்சிகள் கூட எந்த யோசனையும் சொல்லாத நிலையில்   7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி செலவை அரசே ஏற்கும் என அதிமுக அரசுதான் அறிவித்ததாக குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து தான் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பொறியியல் மற்றும்சட்டக் கல்விக்கு திமுக கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தார்.

உங்களுக்குத்தான் மோடி போபியா..! சிலந்திகள் சிங்கங்களை என்ன செய்து விட முடியும்- முரசொலிக்கு தமிழிசை பதிலடி

அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி

அதிமுக ஆட்சியில்  ஏழை எளிய மக்களுக்கு செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், முதியோர் உதவி தொகை, பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர், மினி கிளினிக் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறுத்தி விட்டதாக குற்றம்சாட்டினார். அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவோம் என்றார்கள் ஆனால் அதையும் செயல்படுத்தவில்லை. ஆசிரியர்களையும் கோரிக்கைகளையும் கைவிட்டு விட்டனர். தமிழ், ஆங்கிலம் இரு மொழி கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கின்றது என தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. எனவே அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் என கூறினார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இறுதியானது. நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான் என்ற அவர் இணைப்புக்கு பேச்சுக்கே இடம் இல்லை என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

மனுஸ்மிருதி பிரதியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய திருமா.! ஆர்எஸ்எஸ் பேரணியை எதிர்ப்பது ஏன்..! புதிய விளக்கம்

click me!