மதராசாக்களில் என்ன கற்றுத் தரப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.. கேரள ஆளுநர் ஆரிப் முஹம்மது கான்.

By Ezhilarasan BabuFirst Published Jun 29, 2022, 5:15 PM IST
Highlights

மதரசாக்களில் என்ன கற்றுத் தரப்படுகிறது என்பது ஆராயப்பட வேண்டும் என்றும் அதை தடை செய்ய வேண்டும் என்றும் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார். 

மதரசாக்களில் என்ன கற்றுத் தரப்படுகிறது என்பது ஆராயப்பட வேண்டும் என்றும் அதை தடை செய்ய வேண்டும் என்றும் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார். 5 வயது முதல் 14 வயது வரை குழந்தைகள் ஆரம்ப கல்வி பெறுவது அவர்களின் உரிமை என்றும் அவர் கூறியுள்ளார். உதய்பூர்  படுகொலை தொடர்பாக முன்வைக்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபூர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து பேசியது கருத்து சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, அவரின் பேச்சுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என வளைகுடா நாடுகள் நிர்பந்தித்து வந்தன. இந்நிலையில் நாடு முழுவதும்  நுபூர் ஷர்மாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. இது ஒருபுறம் உள்ள நிலையில், நுபூர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: ராஜஸ்தான் டெய்லர் கொலை விவகாரம்... பாக். தீவிரவாதிகள் செயலா? உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி தகவல்!!

இந்த வரிசையில் நுபூருக்கு ஆதரவு தெரிவித்து கருத்துப் பதிவிட்டு வந்த ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த  கண்ணையா லால் என்ற இளைஞர் நேற்று மர்ம நபர்களால் சாலையில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். நுபூர் சர்மாவை இனி யார் ஆதரித்துப் பேசினாலும் இதுதான் கதி என முன்னதாக அவர்கள் கூறியதுடன் பயங்கர ஆயுதங்களை காட்டி எச்சரித்து வீடியோ ஒன்றும் வெளியிட்டனர். அந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் அவர்களை கைது செய்தனர். மத அடிப்படையில் நடந்த இந்த படுகொலையை பலரும் கண்டித்து வருகின்றனர், பல இஸ்லாமிய இயக்கங்களும் இப்படுகொலையை வன்மையாகக் கண்டித்துள்ளன.

இதையும் படியுங்கள்: துணை குடியரசு தலைவர் தேர்தல் எப்போது? அறிவித்தது தலைமை தேர்தல் ஆணையம்!!

இந்நிலையில் இந்த படுகொலையின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் இதுபோன்ற படுகொலைகள் கண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டும், இத்தகைய கொள்கை இஸ்லாத்தில் இல்லை என தெரிவித்த்துள்ளார். தனுது பேட்டியில் மேலும் அவர் கூறியிருப்பதாவது:- மதராசா கல்வி என்பது எதிர்க்கப்பட வேண்டும், மதரசாக்களில் என்ன கற்பிக்கப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். அக்கல்வியை குழந்தைகளுக்கு கற்றுத் தரப்பட வேண்டியது சட்டமா அல்லது மத நம்பிக்கையின் ஒரு பகுதியா என்பது ஆராய வேண்டும்.

மதச் சட்டங்கள் மனிதனால் எழுதப்பட்டவை, இஸ்லாமிய ஆட்சியாளர்கள் காலத்திலிருந்து தான் அது பின்பற்றப்படுகிறது, அது ஒன்றும் குர்ஆனிலிருந்து வந்தவை அல்ல,  ஐந்து வயது முதல் 14 வயது வரை ஆரம்ப கல்வி பெற வேண்டும் என்பது ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமை, 14 வயது வரை குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி வழங்க கூடாது, ஆனால் மதரஸாக்களில் குழந்தைகளுக்கு என்ன கற்றுத்தரப்படுகிறது? என்பதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும், அக்கல்விக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் எதிர்ப்பு தெரிவித்தார், தலை துண்டிப்பது, பழிவாங்குவது இஸ்லாத்துக்கு நேர்மாறானது என்றும் அவர் கூறினார். 
 

click me!