கும்பாபிஷேகம் நடத்த பழனி முருகன் காசு சம்பாதித்து தரலயா? அறநிலையத்துறையை புரட்டி எடுத்த பாஜக.

By Ezhilarasan BabuFirst Published Jun 29, 2022, 2:41 PM IST
Highlights

தமிழ்நாட்டிலேயே உண்டியல் வசூலில் முதலிடத்தில் இருக்கும் பழனி முருகனுக்கு ஏன் 16 ஆண்டுகள் ஆகியும் கும்பாபிஷேகம் நடத்தவில்லை என பாஜக  ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழ்நாட்டிலேயே உண்டியல் வசூலில் முதலிடத்தில் இருக்கும் பழனி முருகனுக்கு ஏன் 16 ஆண்டுகள் ஆகியும் கும்பாபிஷேகம் நடத்தவில்லை என பாஜக  ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக  இன்று காலை இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தில் இந்து சமய அறநிலைய துறை ஆணையர் திரு ஜே குமரகுருபரன், அவர்களை நேரில் சந்தித்து  மனு கொடுக்கப்பட்டுள்ளது. அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் பின்வருமாறு:-

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு பழனி. இன்றும் பழனியில் பல சித்தர்கள் மற்றும் ரிஷிகள் வாழும் மலையாக பழனி மலை கருதப்படுகிறது. இங்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கேரளா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: கோவை கலவரத்திற்கு கருணாநிதி பொறுப்பேற்பாரா? திமுகவுக்கு சவால் விடும் வானதி சீனிவாசன் !

பழனி முருகன் கோவிலில் கடந்த 03.04.2006 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அனால் 16 ஆண்டுகள் கடந்தும் இன்றும் கும்பாபிஷேகம் நடத்தபடவில்லை. தமிழ்நாட்டிலேயே உண்டியல் வசூலில் முதலிடத்தில் இருக்கும் கோவில் பழனி. 2015-2016 ஆண்டு உண்டியல் வசூல் 33 கோடி (ஆதாரம்: 26 ஜூலை 2016 மாலை மலர்). 

கடந்த 24 நவம்பர் 2021, 67 நாட்கள் (கந்த ஷஷ்டி மற்றும் கார்த்திகை தீப திருவிழா) உண்டியல் வருமானம் ரொக்கம் 4 கோடியே 29 லட்சம்,  1914 கிராம் தங்கம், 19164 கிராம் வெள்ளி, 288 வெளி நாடு கரன்சி நோட்டுகள் (ஆதாரம்: India Ahead youtube channel https://www.youtube.com/watch?v=FTyUubZBG6c).

இதையும் படியுங்கள்: சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்.. சும்மா விட மாட்டோம்.. ஒவ்வொரு அடியும் பார்த்து வைக்கிறோம்.. சேகர் பாபு.

 மார்ச் 2022 நிலவரப்படி 10 நாள் பங்குனி உத்திர திருவிழா உண்டியல் வருமானம், ரொக்கமாக 2.8 கோடி, தங்க ஆபரணங்கள் - 907 கிராம், வெள்ளி - 11690 கிராம் மற்றும் வெளிநாட்டு பணங்களும் வந்துள்ளது (ஆதாரம்: தி  ஹிந்து 15 மார்ச் 2022).  இவ்வளவு வருமானம் ஈட்டி தரும் பழனி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த ஏன் தயக்கம் ? இந்துக்களின் நியாயமான கோரிக்கைகளும் திறம்பட செய்யல்படுத்தப்படும் என திமுக அரசு உறுதியளித்தது.  

ஆனால் பல முறை பழனி கும்பாபிஷேகம் நடைபெறும் என்று கூறி விட்டு இன்றும் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. கடந்த 14 ஜூலை 2020, பழனி முருகன் கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரபானு ரெட்டி அவர்கள், "கோவில் கும்பாபிஷேக பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 6 கோடியே 47 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.” 

கடந்த 06 ஜூலை 2021ல்  இன்னும் ஒரு வருடத்தில் பழனி கும்பாபிஷேகம் நடைபெறும்.மேலும் பழனி கோவிலுக்காக 52 ஏக்கரில் இடம் வாங்கபட்டுள்ளது. திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு இணையாக பழனி கோவிலும் கொண்டுவரப்படும் என அறநிலைய துறை அமைச்சர் திரு.சேகர் பாபு அவர்கள் அறிவித்தார். 

கடந்த 3 ஜனவரி 2022ல் "பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலையில் நடக்கும்! " - அறநிலைய துறை அமைச்சர் திரு.சேகர் பாபு அவர்கள் உறுதியளித்தார் ஆனால் அதற்கான எந்தவொரு ஏற்பாடுகளும் நடைபெறவில்லை.  இவ்வளவு வருமானம் ஈட்டியும் பழனி முருகனுக்கு கும்பாபிஷேகம் நடத்த மனமில்லையா?  

தமிழக அரசும்,  இந்து அறநிலைய துறையும் பலமுறை கோரிக்கை வைத்தும் ஏன் இந்துக்களும் முருக பக்தர்களும் மனம் புண்படும் வகையிலும் அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமலும் கும்பாபிஷேகம் நடத்தாமல் ஏன் காலம் தாழ்த்த வேண்டும்?  இதை உடனடியாக பரிசீலனை செய்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்துமாறு வலியுறுத்துகிறோம். 

மேலும் காலதாமத்திற்கான காரணத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிடவும் வலியுறுத்துகிறோம். இதற்கான தீர்வு எட்டப்படாத நிலையில் இதை பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் போராட்டமாக முன்னெடுக்கும் என்பதை இதன் மூலம் தெரியபடுத்திக்கொள்கிறோம். என பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். 

click me!