AIADMK: கையில் வேலுடன் EPS.. சூரசம்ஹாரம் ஸ்டார்ட்.! டாராக கிழித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் !

Published : Jun 29, 2022, 02:25 PM ISTUpdated : Jun 29, 2022, 02:28 PM IST
AIADMK: கையில் வேலுடன் EPS.. சூரசம்ஹாரம் ஸ்டார்ட்.! டாராக கிழித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் !

சுருக்கம்

AIADMK: சென்னையில் அதிமுக பொதுக்குழு கடந்த 23-ந் தேதி வரலாறு காணாத குழப்பங்கள், வன்முறைகளுடன் முடிவடைந்தது. அதிமுகவின் 50 ஆண்டு கால வரலாற்றில் 30 நிமிடத்தில் முடித்து வைக்கப்பட்ட முதல் பொதுக்குழு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

கட்சியின் தீர்மானக் குழு உருவாக்கிய தீர்மானங்களையே பொதுக்குழு ஒட்டுமொத்தமாக நிராகரித்த வினோத சம்பவமும் நடந்தது இந்த பொதுக்குழுவில்தான்.  காரணம் ஒற்றை தலைமை என்ற கோஷம்தான். பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் புதிய அவைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக அடுத்தடுத்து பேசியவர்கள் கூறினர்.

மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு ஆதரவாக உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு நெருக்கமாக இருந்த நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் எடப்பாடி தரப்புக்கு தாவி விட்ட நிலையில், சார்பு அணிகளான எம்ஜிஆர் இளைஞரணி, புரட்சித் தலைவி அம்மா பேரவை, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட  பலரும் எடப்பாடி தரப்பிடம் சரணடைந்து விட்டனர்.

இதையும் படிங்க : MGR : ஒற்றை தலைமை விவகாரம் - அன்றே கணித்த எம்.ஜி.ஆர்.. தீர்வு இதுதான் !!

இதையும் படிங்க : AIADMK: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 4 பேர் அதிமுகவில் நீக்கம்..இபிஎஸ் தரப்புக்கு திகில் காட்டிய ஓபிஎஸ் தரப்பு

இதனிடையே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஆதரவாக அவர்களது ஆதரவாளர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அவரை ஆதரித்து பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டின் அருகிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் நேற்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டர்களில் எடப்பாடி பழனிசாமி கிரீடம் அணிந்து, கையில் வேல் ஏந்தி, கழுத்தில் மாலை அணிந்து இருப்பது போல் உள்ளது. மேலும் 'சூரசம்ஹாரம் ஸ்டார்ட்' என்ற வாசகம் எழுதப்பட்டு உள்ளது.

எதிரியை அழிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி கையில் வேல் எடுத்து உள்ளார். அதாவது முருகப்பெருமான், கையில் வேலுடன், சூரனை வதம் செய்து வெற்றி பெற்றது போல எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவார். அதனை குறிக்கும் வகையில் போஸ்டர்களை ஒட்டி உள்ளோம் என்று கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இந்த நிலையில் பல இடங்களில் அந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு உள்ளது. இதனால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : AIADMK: எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவும் வைத்திலிங்கம்? ஓபிஎஸ் அதிர்ச்சி !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி