மேயர் அங்கியோடு உதய் காலில் விழுவதுதான் திராவிட மாடலா? திமுகவின் சட்டையை பிடித்து உலுக்கும் ஆர்.பி.உதயகுமார்

By Ajmal KhanFirst Published Jun 29, 2022, 1:48 PM IST
Highlights

மேயர் அங்கியை அணிந்து கொண்டு சுயமரியாதை காற்றில் பறக்க விட்டு உதயநிதியின் காலில் விழுவது தான் திராவிட மாடலா முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

உதயநிதி காலில் விழுந்த மேயர்

தஞ்சாவூர் மாநகராட்சியில் நவீன தூய்மைப்படுத்தும் வாகனத்தை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது  மேயர் ராமநாதன்  உதயநிதி காலில் மேயர் அங்கியோடு  விழுந்து வணங்கினார். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அந்த வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இது குறித்து கருத்து தெரவித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,  திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக அதிமுக உள்ளது. உலகில் முதன் முதலில் ஏழைகளுக்காக 17.10.1972 ஆம் ஆண்டு அதிமுக இயக்கத்தை எம்ஜிஆர் வழங்கினார். எம்ஜிஆர் இருக்கும் வரை திமுக கோட்டை பக்கம் எட்டிப் பார்க்க முடியவில்லை. அதனை தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுகவை நாட்டில் மூன்றாம் பெரிய இயக்கமாக உருவாக்கினார். எங்களை வழிநடத்திச் செல்லும் ஜெயலலிதா காலில் விழுவதை திமுக கேலி செய்தும், நையாண்டியும் செய்து பேசினர். ஆனால் இன்றைக்கு திமுகவின் தன்மானம் சுயமரியாதை எங்கே போனது என கேள்வி எழுப்பினார்.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வருகிறார? இது என்ன புது டுவிஸ்டா இருக்கு

ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டை அவ்வப்போது மாற்றி வருகிறார்..தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் மனு

சுயமரியாதை எங்கே சென்றது

 தஞ்சையில் உதயநிதி வந்தபோது அங்கு தஞ்சை மேயர் மேயருக்கான அங்கியுடன் சென்று உதயநிதியின் காலில் விழுந்து உள்ளார். உதயநிதி அதை கண்டிக்காமல் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டுள்ளார்.காலில் விழுவதை சுயமரியாதை என்று விமர்சித்த திமுக  இதற்கு திமுக என்ன விளக்கம் சொல்லப் போகிறது?மேயர் அங்கியுடன் பொதுவெளியில் காலில் விழும் உரிமையை யார் கொடுத்தது? மூத்தோர் காலில் இளையோர் விழுவது தமிழர்கள் பண்பாடு கலாச்சாரம். ஆனால் இன்றைக்கு வயது இளையோரிடம் முதியோர் காலில் விழுந்து சுயமரியாதையை காற்றில் பறக்கப்பட்டுள்ளது. இந்த புது கலாச்சாரம் தான் 
திராவிடத்தின் மாடலா ? இதுதான் திராவிட மாடலில் சுயமரியாதை இப்படித்தான் அம்பலப்படுத்துகிறதா நிச்சயம் இதை மக்களே கேட்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

இதையும் படியுங்கள்

நமது அம்மா நாளிதழில் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்!வெறுப்பில் பதவியை தூக்கி எறிந்த மருது அழகுராஜ்

 

click me!