மதன் – அண்ணாமலை – கே.டி.ராகவன்..! நடந்தது என்ன? பின்னணியை ஆராயும் உளவுத்துறை..!

Published : Aug 30, 2021, 11:38 AM IST
மதன் – அண்ணாமலை – கே.டி.ராகவன்..! நடந்தது என்ன? பின்னணியை ஆராயும் உளவுத்துறை..!

சுருக்கம்

தமிழகத்தில் பாஜகவை சீரமைத்து அடுத்த தேர்தலுக்கு தயாராகும் நேரத்தில் இந்த வீடியோ, ஆடியோ எல்லாம் வெளியானதை எதார்த்தமான ஒன்றாக பாஜக மேலிடம் நம்பவில்லை என்கிறார்கள். மேலும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு அவரது இமேஜூம் கிடுகிடுவென உயர்ந்தது.

தமிழக அரசியல் அரங்கை மட்டும் அல்ல ஒட்டு மொத்தமாக தமிழக பாஜக மீதான நன் மதிப்பையே கேள்விக்குறியாக்கிவிட்ட கே.டி.ராகவன் வீடியோ விவகாரம் தொடர்பான பின்னணியை விசாரிக்க மத்திய உளவுத்துறை அதிகாரிகள் களம் இறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கே.டி.ராகவன் வீடியோ வெளியான விவகாரம் வழக்கமான பாஜக உள்ளடி வேலையாகவே முதலில் அக்கட்சியின் தலைமையினால் பார்க்கப்பட்டது. தனக்கு எதிரான ராகவனை மதனை வைத்து அண்ணாமலை பழி தீர்த்துக் கொண்டார் என்றே முதலில் பாஜக மேலிடம் நம்பியது. ஆனால் அதற்கு அடுத்த சில நாட்களில் மதன் வெளியிட்ட சில ஆடியோக்கள் தான் இந்த விவகாரத்தை பாஜக மேலிடம் மிகவும் சீரியசாக எடுத்துக் கொள்ள காரணமாகிவிட்டதாக சொல்கிறார்கள். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர் கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் பாஜக மேலிடம் பின்னணியை ஆராயத் தொடங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணையின் போது அண்ணாமலை, ராகவன் உள்ளிட்டோர் எப்படி மதனிடம் சிக்கினார்கள் என்கிற விவரத்தை தான் தற்போது உளவுத்துறை ஆராய்ந்து வருவதாக சொல்கிறார்கள். அதிலும் கே.டி.ராகவன் வீடியோ விவகாரத்தை அண்ணாமலை மிகவும் லாவகமாக கையாண்ட அடுத்த சில நாட்களிலேயே அண்ணாமலையை குறிவைத்து ஆடியோக்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. இவைகள் தான் பாஜகவின் இமேஜை மிகவும் டேமேஜ் செய்துவிட்டது. எனவே அந்த ஆடியோக்கள் இயல்பாக ரெக்கார்டு செய்திருக்கப்பட வாய்ப்பு இல்லை நீண்ட கால சதித்திட்டத்தின் ஒரு அங்கமாக கூட இருக்கலாம் என்று பாஜக மேலிடம் நம்புகிறது.

அதிலும் தமிழகத்தில் பாஜகவை சீரமைத்து அடுத்த தேர்தலுக்கு தயாராகும் நேரத்தில் இந்த வீடியோ, ஆடியோ எல்லாம் வெளியானதை எதார்த்தமான ஒன்றாக பாஜக மேலிடம் நம்பவில்லை என்கிறார்கள். மேலும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு அவரது இமேஜூம் கிடுகிடுவென உயர்ந்தது. திமுகவின் வாரிசான உதயநிதிக்கு நிகராக சமூக வலைதளங்களில் அண்ணாமலை புகழப்பட்டுக் கொண்டிருந்தார். இந்த சூழலில் தான் அண்ணாமலையை மையமாக வைத்து கே.டி.ராகவன் வீடியோ சர்ச்சை எழுந்தது.

மேலும் வீடியோவை வெளியிட்ட மதன் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருடன் கடந்த சில மாதங்களாக நெருங்கியிருப்பதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. இதன் உண்மைத்தன்மை உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளவே மத்திய உளவுத்துறை களம் இறக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். எனவே இந்த விஷயத்தை பாஜக சாதாரணமாக கடந்து செல்லாது என்றும் பதிலடி கடுமையாக இருக்கும் என்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!