ஜெயலலிதா மரணம்..! ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை..! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..? மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்

By Ajmal Khan  |  First Published Oct 23, 2022, 1:04 PM IST

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகம் சாமி ஆணைய அறிக்கை மீது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மருத்துவ துறை அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 


புதிதாக 50 சுகாதார நிலையங்கள்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒதுக்கீடு குறித்த விவரங்கள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் புதிதாக 25  ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, 2,127 ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் உள்ளது. புதிய 50 சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுவதால் அதன் எண்ணிக்கை 2,177ஆக உயர உள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படாமல் இருந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தற்போது 50 சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறினார். 

Tap to resize

Latest Videos

தமிழர்களின் பாரம்பரிய ஆன்மீக உரிமைகளை தடுக்கும் திமுக.. கந்தசஷ்டி விழா குறித்து அண்ணாமலை கடும் தாக்கு!

தீபாவளி பண்டிகை- சிறப்பு சிகிச்சை மையம்

2.3 கோடி பேர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தொடர் சிகிச்சையின் மூலமாக மருந்து பெட்டகம் வழங்கி இருக்கிறோம். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 93,60,434 பேர் முதல் முறை சிகிச்சை பெற்று இருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் ஒரு கோடியை தொட உள்ளது. 1 கோடியை இலக்காக வைத்து இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 1 கோடி தொட உள்ள நிலையில் அந்த 1 கோடியாவது மருந்து பெட்டகம் பெறும் நபருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெட்டகத்தை வழங்க உள்ளதாக கூறினார். தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தீபாவளி வெடி வெடிக்கும் போது ஏற்படும் தீ விபத்து, தீக்காயங்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக 5 லிருந்து 10 படுக்கைகள் வரை தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆணவத்தின் வீழ்ச்சியை குறிக்கும் நாள்..! இருள் விலகி ஒளி பிறக்கட்டும் - ஓபிஎஸ்

ஜெயலலிதா மரணம்- அடுத்த கட்ட நடவடிக்கை

பொதுமக்கள் உயரே பறக்கக்கூடிய பட்டாசுகளையும், அதிக சத்தம் எழுப்பக்கூடிய பட்டாசுகளையும் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தீபாவளி வெடி வெடிக்கும் போது ஏற்படும் தீ விபத்து, தீக்காயங்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக 5 லிருந்து 10 படுக்கைகள் வரை தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகம் சாமி ஆணைய அறிக்கை மீது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மருத்துவ துறை அதிகாரிகள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது எனவும்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் ப்ரொபஷனலாக எதுவும் இல்லை..! அரசியல் வேண்டுமானால் செய்யலாம்..! அன்புமணி

click me!