ஆணவத்தின் வீழ்ச்சியை குறிக்கும் நாள்..! இருள் விலகி ஒளி பிறக்கட்டும் - ஓபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Oct 23, 2022, 10:42 AM IST

தீபத் திருநாள், ஆணவத்தின் வீழ்ச்சியை குறிக்கின்ற நாளாகவும், காரிருள் மறைந்து, அறிவொளி பிறந்து, இன்பமும், இளிமையும் நிறைந்த நன்னாளாகவும் விளங்குகிறது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 


தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகையையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபங்களை வரிசையாக ஏற்றி ஒளிமயமான இறைவனை வழிபடும் தினமான தீபாவளிப் பண்டிகையை உவகையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.திருமால், அன்னை மகாலட்சுமி துணையுடன், நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இத்தீபத் திருநாள், ஆணவத்தின் வீழ்ச்சியை குறிக்கின்ற நாளாகவும், காரிருள் மறைந்து, அறிவொளி பிறந்து, இன்பமும், இளிமையும் நிறைந்த நன்னாளாகவும் விளங்குகிறது.

Tap to resize

Latest Videos

திடீரென வெடித்த சிலிண்டர்..! இரண்டாக உடைந்த கார்...! துடி துடித்து ஒருவர் பலி


இருள் விலகி ஒளி பிறக்கட்டும்

இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் கருதப்படும் இந்தன்நாளில் தனி மனிதனின் வாழ்வில் மட்டுமல்லாமல், சமுதாயத்தின் அங்கமாகிய மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தீப ஒளிகள் ஏற்றப்பட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

தமிழக மாணவர்களை விரட்டி விரட்டி தாக்கிய கொடூரம்..! திருப்பதி டோல்கேட்டில் மர்ம நபர்கள் தாக்கியதால் பரபரப்பு

click me!